23.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ மணிப்பூர் மாநில பாஜக முதலமைச்சரின் ஒருதலைப் பட்சமான செயல்பாடு காரணமாக எழுந்துள்ள பதட்ட நிலையைக் கருத்தில் கொண்டு மோடி அரசு உடன் தலையிட வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
♦ ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடி திறந்த ராமன் கோயில் நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர்.
♦ அசாம் சோனிபூர் மாவட்டத்தில் ராகுல் மேற்கொண்ட நீதிப் பயணத்தில் அங்குள்ள கோயிலில் நுழைய தடை. காங்கிரசார் ஆர்ப்பாட்டம்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட் டின் வெற்றியைச் சகித்துக் கொள்ள முடியாமல், தமிழ் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக் கும் நோக்கில் பாஜவில் பல நிலைகளில் பொறுப்பு வகிப் பவர்கள் செயல்படுகிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
♦ எதிர்க்கட்சி ஆளும் மா நிலங்களுக்கு நிதி அளிப்பதில் பாரபட்சம் காட்டும் மோடி அரசைக் கண்டித்து பிப்ரவரி 8 அன்று டில்லியில் பினராயி விஜயன் தலை மையில் கேரளா ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச் சருக்கு அழைப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ “நான் ராமுக்கு எதிரானவன் அல்ல. நான் ராமரையும், சீதையையும் மதிக்கிறேன். ஆனால் அவர்கள் சீதையை முக் கியப்படுத்துவதில்லை. அப்படியானால், நீங்கள் பெண் களுக்கு எதிரானவரா? ராமரின் 14 ஆண்டுகால வன வாசத்தின் போது அவருக்குத் துணையாக இருந்த சீதையை மறந்துவிடாதீர்கள். கவுசல்யா இல்லாவிட்டால் ராமர் பிறந்திருக்க மாட்டார்… யாரேனும் ராமரை வணங்கினாலும், ரஹீமை வணங்கினாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் அதை யாராவது அரசியலாக்கினால் எனக்கு ஆட்சேபனை உண்டு” என அனைத்து மத நம்பிக்கை பேரணியில் மம்தா ஆவேசம்.
♦ அயோத்தியில் ராமன் கோவில் திறப்பு விழா பற்றிய பதிவுகள் மற்றும் புதுப்பிப்புகளால் சமூக ஊடகங்கள் நிரம்பி வழியும் நிலையில், கேரள மாநில நடிகை பார்வதி திருவோத்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையைப் பகிர்ந்துள்ளார்,
♦ ஜனவரி 22 அன்று கோவில் விழாவைக் குறிக்கும் வகையில், சிபிஅய்(எம்) ஆளும் மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ மக்களவைத் தேர்தலுக்கு முன், பார்லிமெண்டில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற, காங்கிரஸ் தலைவரின் மனு மீது, மோடி அரசு பதில் அளிக்க, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.
♦ காங்கிரஸ் 300 மக்களவைத் தொகுதிகளில் போட்டி யிட்டு, ஏனைய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்கிறார் மம்தா.
றீ அயோத்தி நிகழ்வை முன்னிட்டு மத்தியப் பிரதேசத் தின் ஜபுவாவில் கிறிஸ்துவ சிலுவை தாங்கிய வீட்டின் மீது இந்து இளைஞர்கள் காவிக்கொடி ஏற்றி அராஜகம்.
தி டெலிகிராப்:
♦ ராமன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி உச்ச நீதிமன்றத்தில் விடுமுறை அளிக்கப்படவில்லை. இதுகுறித்து இந்திய பார் கவுன்சில் மற்றும் உச்சநீதிமன்றம் பார் அசோசி யேஷன் தலைவர் ஆதிஷ் சி.அகர்வாலா மனுவை நிராகரித்தார் தலைமை நீதிபதி.
– குடந்தை கருணா