அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கும் ராமன் கோவில் குடமுழுக்குக்கு அழைப்பாம்

1 Min Read

புதுடில்லி,ஜன.22- அயோத்தி வழக்கில் தீர்ப் பளித்த உச்ச நீதிமன்றத் தின் 5 நீதிபதிகளுக்கு இன்று (22.1.2024) நடை பெற உள்ள ராமன் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமன் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதால் அந்த நிலம் ராமன் கோயிலுக்கே சொந்தம் என்று ஒரு தரப்பும், மசூதி இருந்த இடம் இஸ்லாமி யர்களுக்கே சொந்தம் என மற்றொரு தரப்பும் வாதிட்டு வந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், குடியரசுத் தலைவரின் பரிந்துரையின்பேரில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருப்ப வருமான ரஞ்சன் கோகாய், மேனாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே, தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், மேனாள் நீதிபதி அசோக் பூஷன், மேனாள் நீதி பதியும் தற்போது ஆந் திரப் பிரதேச ஆளுநராக இருப்பவருமான அப்துல் நசீர் ஆகியோர், சர்ச்சைக் குரிய நிலம் ராமருக்கே சொந்தம் என தீர்ப்பளித் தனர்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு இந்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அங்கு ராமன் கோயில் கட்டும் பணி தொடங்கப்பட்டு இன்று திறப்பு விழா காண உள்ளது. இதில் பங்கேற்க 7 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூவாயிரம் பேர் விஅய்பிக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துறவிகள், நிதி உதவி அளித்தவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட் டோர் இடம் பெற்றுள் ளனர். இந்த வரிசையில், ராமன் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய உச்சநீதி மன்ற நீதிபதிகள் 5 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக இருந்து ஓய்வு பெற்ற வர்கள், தற்போதைய நீதிபதிகள், புகழ்பெற்ற வழக்குரைஞர்கள் உள் பட நீதித்துறையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட் டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *