அமராவதி, ஜன. 21- நாடு முழு வதும் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்த வேண் டும் என்று பல்வேறு அர சியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என ஒன்றிய அரசு பிடிவாதம் காட்டி வருகிறது.
கடந்த ஆண்டு பீகா ரில் அம்மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. அதன் முடிவு களை வெளியிட்டது. அதில், இதர பிற்படுத்தப் பட்டோர் 63 சதவீதம்பேர் இருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில், பீகாரை தொடர்ந்து ஆந் திராவில் 19.1.2024 அன்று ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது.
இதுகுறித்து ஆந்திர மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது:-
சுதந்திரம் பெற்ற பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது இல்லை. மக்கள்தொகை கணக் கெடுப்பு மட்டுமே நடத் தப்படுகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத் தினால்தான், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறாத ஜாதிகளுக்கும் உதவ முடியும். இது, அவர்களின் வாழ்க்கை தரத்தை மாற்றி அமைக் கும்.
முதலில், 139 பிற்படுத் தப்பட்ட ஜாதிகளை மட்டும் கணக்கெடுக்க திட்டமிட்டு இருந்தோம். இப்போது எல்லா ஜாதி களையும் கணக்கெடுக்க உள்ளோம். கணக்கெ டுப்பு பணியில் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபடு வார்கள். ஒவ்வொரு தன்னார்வலருக்கும் 50 வீடுகள் ஒதுக்கப்படும். அவர்கள் வீடு, வீடாக சென்று, ஜாதி விவரங் களை சேகரிப்பார்கள். அந்த தகவல்களை மாநி லம் முழுவதும் உள்ள கிராம செயலகங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அங்குள்ள அதிகாரிகள் அதை சரிபார்த்து, தேவைப் பட்டால் திருத்தம் செய் வார்கள்.
அதன் அடிப்படை யில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.
19ஆம் தேதி முதல் 10 நாட்களில் ஒரே கட்ட மாக இப்பணி முடிக்கப் படும். தேவைப்பட்டால், 4 அல்லது 5 நாட்கள் நீட்டிக்கப்படும். நாடாளு மன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக, பிப்ரவரி 15ஆம் தேதியோ அல்லது அதை ஒட் டியோ கணக்கெடுப்பு தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடையும். இந்த கணக்கெடுப்பு நியா யமானதாக, விரிவான தாக இருக்கும். நாடு முழு வதற்கும் முன்னுதாரண மாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.