புதுடில்லி, ஜன.20- தமிழ்நாட் டிற்கு காவிரியில் பிப்ரவரி மாதத் திற்குள் 4 டிஎம்சி நீரை திறந்து விடுமாறு கருநாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 92-ஆவது கூட்டம் அதன் தலை வர் வினீத் குப்தா தலைமையில் டில்லியில் நடைபெற்றது.
காணொலி மூலமாக நடந்த இந்த கூட்டத்தில் குழுவின் செய லாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், தமிழ்நாடு அர சின் சார்பில் காவிரி தொழில் நுட்பக்குழு தலைவர் சுப்பிர மணியம் பங்கேற்றனர்.
கருநாடகா, கேரளா, புதுச் சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளும், வானிலை ஆய்வு மய்ய நிபுணர் களும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் கருநாடக அணைகளின் நீர்மட்டம், நீர் வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையின் அளவுஆகியவை குறித்து விவா திக்கப்பட்டது.
அப்போது தமிழ்நாடு அர சின் தரப்பில், “உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவின்படி, தமிழ் நாட்டுக்கு ஜனவரி மாதத்திற்குள் 165.95 டிஎம்சி நீரை கருநாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் நிகழாண்டில் இதுவரை 75.383 டிஎம்சி நீர் மட்டுமே திறந்து விட்டுள்ளது. 90.532 டிஎம்சி நீர் இன்னும் நிலுவையில் உள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 33.495 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. குடிநீர் தேவைக்காக நாள்தோறும் 600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு ஏற்றவாறு உச்சநீதிமன்ற உத்தர வின்படி கருநாடகஅரசு நீரை திறந்துவிட வேண்டும்”என கோரப் பட்டது.
இதற்கு கருநாடக அரசின் தரப்பில், “கருநாடகாவில் வறட்சி நிலவுவதால் கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளுக்கும் நீர் வரத்து முற்றிலுமாக குறைந் துள்ளது. அணைகளில் குறைந்த அளவிலே நீர் இருப்பில் உள்ளது. தற்போது அணையில் இருக்கும் நீரைக் கொண்டே பெங்களூரு, மைசூரு ஆகிய மாநகரங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.தமிழ்நாட்டுக்கு கூடுதலாக நீரை திறந்தால் கருநாடகாவில் குடி நீர் பஞ்சம் ஏற்படும். தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் நீரை திறந்துவிடும் நிலையில் கரு நாடகா இல்லை” என தெரிவிக் கப்பட்டது.
காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா, “உச்சநீதி மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஜனவரி 19-ஆம் தேதியில் இருந்து 31-ம் தேதிக்குள் 1.49 டிஎம்சி நீரையும், பிப்ரவரி மாதத்தில் 2.5 டிஎம்சி நீரையும் கருநாடகா திறந்துவிட வேண் டும். அதேபோல நிலுவையில் உள்ள நீரில் குறைந்த மழைப் பொழிவு காலத்தில் வகுக்கப் பட்ட பங்கீட்டு கொள்கையின் படி 7.61 டிஎம்சி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும். அதாவது ஜனவரி 19ஆ-ம் தேதி முதல் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தமிழ் நாட்டுக்கு நீர்செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரைக்கு கருநாட காவில் விவசாய அமைப்பினரும், கன்னட அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர்காவிரி நீரை தமிழ்நாட் டிற்கு திறந்துவிடக்கூடாது என கருநாடக அரசை வலியுறுத்தி யுள்ளனர்.
இந்நிலையில் கருநாடக துணை முதலமைச்சரும் நீர் வளத்துறை பொறுப்பு அமைச் சருமான டி.கே.சிவகுமார், “காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவது சிரமம். தமிழ்நாட்டிற்கு நீரை திறந்துவிட முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த பரிந்துரை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்” என்றார்.