சென்னை, ஜன. 20- ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் மறைவு குறித்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழ் நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள இரங்கல் அறிக்கை வருமாறு,
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் ஆரம்ப கால முன்னோடியும், தலைசிறந்த மூத்த தணிக் கையாளருமானசி.என்.ஜெயச்சந்திரன் (91) நேற்று (19.01.2024) காலை 8 மணியளவில் பெங்க ளூருவில் உள்ள அவரது மகன் வீட்டில் காலமா னார் என்பது ஆழ்ந்த வருத்தத்திற்குரியது.
ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் ஆரம்ப கால முன்னோடி களில் ஒருவர். மோகன் குமாரமங்கலம், கே.பால தண்டாயுதம், ப.மாணிக் கம், வழக்குரைஞர் என்.டி. வானமாமலை போன் றோருடன் இணைந்து பணியாற்றியவர்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக்கும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மற்றும் அதன் இணைப்பு அமைப்புகளின் நீண்ட கால தணிக்கையாளராக மிக சிறப்பாக பணியாற் றியவர். இளம் தணிக்கை யாளர்களை உருவாக்கிய தில் குறிப்பிடத்தக்கவர். அவரது மறைவு பெரும் வேதனையளிக்கிறது.
அன்னார் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட் சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வது டன், அவரை பிரிந்து வாடும் அவரது குடும் பத்தினருக்கும், தணிக் கையாளர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
-இவ்வாறு இரா.முத்த ரசன் குறிப்பிட்டுள்ளார்.
ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் மறைவு இரா.முத்தரசன் இரங்கல்
Leave a Comment