20.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைக்கப்பட்டு உள்ள 206 அடி உயரம் கொண்ட உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்தார்.
* பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சரண் அடைய கால அவகாசம் கேட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.
* ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சி முறை மற்றும் அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரானது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். மேலும், செழிப்பான மற்றும் வலுவான ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு,உயர் மட்ட குழுவைக் கலைக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
* தெலங்கானா எஸ்.சி. பிரிவினரில் உள் ஒதுக்கீடு குறித்து ஆராய ஒன்றிய அரசு அய்ந்து நபர் குழு அமைப்பு.
டெக்கான் கிரானிக்கல் சென்னை:
* நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பு: தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், தேர்தலை ஒருங்கிணைக்கவும் தனித்தனி குழுக்கள் நியமனம்
* தி.மு.க. தலைவரும் தமிழ் நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பாஜகவை தேர்தலில் வீழ்த்தும் பணியில் தனது கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தும் விதத்தை குறிப்பிட்டு தலையங்க செய்தி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு பாஜக “கதவை திறந்து வைத்திருக்கிறது” என்ற புதிய ஊகங்களுக்கு மத்தியில்,ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் மற்றும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் ஆகியோர் நிதிஷ் குமாருடன் சந்திப்பு.
* ஹிந்து மதத்தின் பலம் பன்முகத்தன்மையில் உள்ளது. அயோத்தி ராமன் கோவிலை பாஜக அரசியலாக்குவதால், பக்கவாட்டுக் கதவு வழியாக நிந்தனை போன்ற கருத்துகள் வருகின்றன என்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஜவஹர் சர்கார்.
* ரயில்வே, பாலங்கள், சுரங்கப்பாதைகள், சாலைகள் – அவை தாமதம் மற்றும் மோசமான தரம் ஆகியவற்றால் சிதைக்கப்படுகின்றன, அதே நேரத்தில் அரசாங்கம் வேறு சிந்தனையில் செயல்படுவதாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரைய்ன் குற்றச்சாட்டு.
தி இந்து:
* ஷில்லாங்கில் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தை மணிப்பூர் முதலமைச்சர் புறக்கணிப்பு.
*ராமஜென்மபூமி வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் கோவில் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்
தி டெலிகிராப்:
* டில்லியில் இருந்து முழு நாட்டையும் ஆட்சி செய்ய பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. நாங்கள் அசாமில் இருந்து அசாமை ஆட்சி செய்ய விரும்புகிறோம் என அசாம் மா நிலத்தில் நியாயப் பயணத்தில் ராகுல் பேச்சு.
* அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக ராமர் கோயில் குடமுழுக்கிற்கு அரசு அலுவலகங்களில் அரைநாள் அறிவிப்பு. “அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டத்திற்கும், மத நிறமின்றி மாநிலம் இருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கும் எதிரானது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது” என சி.பி.எம். பொலிட்புரோ கண்டனம்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment