புதுடில்லி,அக்.15- உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு ஒரு தரப்பாக இருக்கும் 11,414 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சட்ட அமைச்சம் பதிலளித்துள்ளது.
கடந்த 2019 முதல் 2023-ஆம் ஆண்டு வரை, உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு ஒரு தரப்பாக இருக்கும், நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளின் விவரம் குறித்தும், அந்த வழக்குகளில் அரசு தரப் புக்காக ஆஜராக அரசுப் பணியில் அல் லாத வழக்குரைஞர்கள், சட்ட ஆலோசகர் களுக்கு செலுத்தப்பட்ட கட்டணம் குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட் டத்தின்கீழ் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விஹார் துர்வே தகவல் கோரியிருந்தார்.
விஹாரின் ஆர்டிஅய் விண்ணப்பத் துக்கு ஒன்றிய சட்ட அமைச்சகம் அளித்துள்ள பதிலில், ‘சம்பந்தப்பட்ட துறையின் உறுதிசெய்யப்பட்ட தரவு களின்படி, ‘இந்தியா’, ‘இந்திய அரசு’, ‘வங்கி’, ‘அமைச்சகம்’ என்ற பல்வேறு பெயர்களில் இந்திய அரசு ஒரு தரப்பாக இருக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டில் 4,536-ஆகவும், 2020-ஆம் ஆண்டில் 3,341-ஆகவும், 2021-ஆம் ஆண்டில் 3,230-ஆகவும், கடந்தாண்டில் 6,159-ஆகவும், நிகழாண்டில் 11,414 ஆகவும் இருக்கின்றன.
இந்த வழக்குகளில் அரசு தரப்புக்காக பங்காற்றிய சட்ட அதிகாரிகள், ஆலோசகர்கள் மற்றும் வழக்குரைஞர்களுக்கு கட்டணமாக கடந்த 2018-20-19-ஆம் நிதி யாண்டில் ரூ. 32.81 கோடியும், 2019_20-20-ஆம் ஆண்டில் ரூ.37.96 கோடியும், 2020-2021-ஆம் ஆண்டில் ரூ.32.46 கோடியும், 2021-20-22-ஆம் ஆண்டில் ரூ.28.78 கோடி யும், 2022-20-23இல் ரூ.31.76 கோடியும், செப்டம்பர் 12-ஆம் தேதி வரையிலான நடப்பு நிதியாண்டில் ரூ.19.62 கோடியும் செலுத்தப்பட்டது’ எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் அதிகாரபூர்வ வலை தள தரவுகளில் 13.10.2023 நிலவரப்படி, ‘மொத்தம் 79,566 வழக்குகள் இன்னும் நிலு வையில் உள்ளன. நிக ழாண்டு மட்டும் 42,548 வழக்குகள் புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டன. 41,723 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.