கந்தர்வகோட்டை அக் 15- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச் சிப்பட்டிக்கு பள்ளி மேலாண்மை குழு மூலம் கணிப்பொறி வழங் கினர்.
அண்மையில் நடைப்பெற்ற பள்ளி மேலாண்மைக் குழு குழுவில் பள்ளிக்கு கணிப்பொறி தேவை என்று தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி கோரிக்கை வைத்தார்.
அப்போது பள்ளி மேலாண்மை குழு மூலம் கணிப்பொறி வழங்குவ தாக உறுதியளித்தன.
அதன்படி தற்போது பள்ளி மேலாண்மை குழு மூலம் கணிப் பொறியை பள்ளி மேலாண்மை குழு மூலமாக கல்வியாளர் மருத் துவர் சுவாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா, துணைத் தலைவி வேதநாயகி, வார்டு உறுப்பினர் கலாராணி, உறுப்பி னர்கள் ராஜலட்சுமி, ருக்மணி, சித்ரா, மகேஸ்வரி, திவ்யா செல்வி, தனலெட்சுமி, சரண்யா, அன்பு நதி, திவ்யா செல்வி, மகேஸ்வரி, சத்யா, சுஜாதா தேவி, ராஜாங்கம், பழனிவேல் , ரஞ்சிதா, நிர்மலா, தேவிகா உள்ளிடோர் தலைமை ஆசிரி யர் மற்றும் ஆசிரியர் பெருமக்க ளிடம் வழங்கினர்.
கணிப்பொறியை பெற்றுக் கொண்ட ஆசிரிய பெருமக்கள் பள்ளி மேலாண்மை குழுவுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் தலைமை ஆசி ரியர் அனைவரையும் வரவேற்று பேசும்போது கடந்த ஆண்டு பள்ளி மேலாண்மை குழு மூலம் பள்ளிக்குத் தேவையான அய்ந்து லட்சம் மதிப்புள்ள கல் கல்வி சீரில் கற்பித்தல் உபகரணங் களான தொலைக்காட்சி ஸ்மார்ட் போர்டு உள்ளிட்டவைகளும், பேன்கள், மேஜைகள், நாற்காலி கள் அறிவியல் அறிஞர்கள் படங்கள், பீரோக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பள்ளிக்கு தேவையான பொருட்களை வழங்கினர்.
தற்போது பள்ளிக்கு கணிப் பொறி வழங்கிய பள்ளி மேலாண்மை குழுவுக்கு எங்களது பள்ளி சார்பிலும் மாணவர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று பேசினார். இல்லம் தேடி கல்வி மய்ய ஒன்றிய ஒருங்கிணைப் பாளர் ரகமதுல்லா பேசும்போது பள்ளி மேலாண்மை குழு மாதம் தோறும் நடைபெற்று வருகிறது.
பள்ளி மேலாண்மை குழுவில் கற்பித்தல் முறைகளையும் பள் ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செயல்படுத்துவ தற்கு வாய்ப்பை பள்ளி மேலாண்மை குழு ஏற்படுத்தி வருகிறது.
நம்முடைய பள்ளி மேலாண்மை குழு மூலம் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு செய்து வருவதற்கு வாழ்த் துகளை தெரிவித்துக் கொள் கிறேன் என்று பேசினார்.
இந்நிகழ்வில் பெற்றோர் களும் அன்பு நதி, ,ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், வெள்ளைச்சாமி, தனலட்சுமி கௌரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.