நெல்லை விரைவு ரயிலில் திருநெல்வேலி வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் உற்சாகம் பொங்க , எழுச்சிமுழக்கத்தோடு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேனாள் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. தலைமைச்செயற்குழு உறுப்பினருமான ந.மாலைராசா, மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம், மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன், காப்பாளர் இரா.காசி, மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில மாணவர்கழக சு.இனியன், பத்தமடை ப.இராசேந்திரன், மாநகர செயலாளர் வெயிலுமுத்து, மாநகர ப.க.தலைவர் முரசொலி முருகன், துணைச் செயலாளர் எம்.ஜி.ஏ..ஜார்ஜ், சேரன்மகாதேவி ஒன்றியத்தலைவர் கோ.செல்ல சுந்தரசேகர், மாவட்ட மாணவர்கழக தலைவர் செ.சூரியா, அம்பை.வழக்குரைஞர் சாமிநாதன், மாவட்ட மகளிரணி பொறுப்பாளர்கள் இரா.பானுமதி,கோவில்பட்டி செயா,அன்பரசி, மாவட்ட ப.க. தலைவர் சந்திரசேகர், நெல்லை பகுதி செயலாளர் ந.மகேசு, சு.இனியன், தச்சை பகுதி செயலாளர் மாரி.கணேசு உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.