புதுச்சேரி, ஜன.18- புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் திருவள்ளுவர் 2055 ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டா டப்பட்டது.
16-01-2024 அன்று காலை 10 மணியளவில் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர்
வே.அன்பரசன் தலைமையில் மாலை யணிவித்து மலர்தூவி கொண்டா டப்பட்டது.
நிகழ்ச்சியில் செயலாளர் கி.அறிவழகன் காப்பாளர்கள் இர.இராசு, இரா.சடகோபன் துணைத் தலைவர் மு. குப்புசாமி பொதுக்குழு உறுப்பினர்கள் விலாசினி இராசு, லோ.பழனி, விடுதலை வாசகர் வட்டத் தலை வர் கோ.மு.தமிழ்ச்செல்வன், செய லாளர் ஆ.சிவராசன், திராவிடர் கழக நகராட்சிப் பொறுப்பாளர்கள் சு.துளசிராமன், மு.ஆறுமுகம், களஞ்சியம் வெங்கடேசன், பகுத் தறிவாளர் கழக மேனாள் அமைப் பாளர் கே.வி.இராசன், கழகத் தோழர்கள் இரா. சாம்பசிவம்,
பெ.ஆதிநாராயணன், லோ.அருள், கி.இராமச்சந்திரன், மகளிரணித் தோழியர் கல்பணா துளசிராமன் இளைஞரணி தோழர்கள் ச.சித் தார்த், சி.கபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தோழர்கள் அனைவரும் ஒவ்வொரு திருக்குறள் கூறினர்.
புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் திருவள்ளுவர் 2055 ஆவது பிறந்த நாள் விழா
Leave a Comment