திருச்சி, அக்.16- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மார்பக புற்றுநோய் விழிப் புணர்வு மாதத்தினை வலியுறுத்தும் வகையில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் 12.10.2023 அன்று மாலை 3 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமை வகிக்க, பெரி யார் நல வாழ்வு சங்கத்தின் செயலர் பேராசிரியர் க.அ.ச. முக மது ஷபீஃக் வரவேற்புரையாற் றினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திருச்சி ஹர்ஷ மித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யத்தின் கதிரி யக்க சிகிச்சை நிபுணர் மருத் துவர் சசிப்பிரியா கோவிந்த ராஜ் அவர்கள் மார்பக புற்று நோய் குறித்து சிறப்புரையாற் றினார்.
உடல் சார்ந்த நோய் அறிகுறிகள்
அவர் தமது உரையில்:–_
புற்றுநோயினை ஒழிப்ப தில் இடையறாது மக்களைத் தேடி விழிப்புணர்வை மேற் கொள்ளும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை மார்பக புற்று நோய் குறித்த விழிப் புணர்வை ஒவ்வொரு ஆண்டும் பெரியார் மருந்தியல் கல்லூரியில் மேற் கொள்ள வாய்ப்பினை வழங் கிவரும் நிர்வாகத்திற்கு தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் நம் இந்தியாவில் 28 பெண்களில் ஒருவர் புற்றுநோயினால் பாதிக்கக்கூடிய அவல நிலை நிலவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக் கின்றது.
இதற்கு காரணம் பெண்கள் தங்கள் உடல்சார்ந்த நோய் அறிகுறிகளை கண்டுகொள்வ தில்லை.
தங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை, உடல் மாறு பாடு களை மற்றவர்களிடத்தில் பகிர்ந்து கொள்வதில் மிகவும் கூச்சப்படுகின்றனர். இதுதான் நோய்கள் முற்றிய நிலைக்கு செல்வதற்கு காரணமாக அமை கின்றது.
அதிலும் குறிப்பாக மார்பக புற்றுநோய் போன்ற நோய்க ளின் ஆரம்ப அறிகுறிகளை பெண்கள் அலட்சியப்படுத்துவ தாலும் வெளியில் சொல்ல தயக்கம் காட்டுவதாலும் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவரிடம் வருவதால் தான் மக்கள் மத்தியில் புற்று நோய் குணப்படுத்த முடியாத நோயாக கருதப்படுகிறது.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால்…
புற்றுநோய் குறித்த சரியான விழிப்புணர்வை பொதுமக்க ளுக்கு எடுத்துச் செல்ல வேண் டும் என்ற நோக்கத்தில் ஹர்ஷ மித்ரா மருத்துவமனை சிறப் பாக செயல்பட்டு வருவதா கவும் பெண்களுக்கு ஏற்படக் கூடிய மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்ட றிந்தால் முற்றிலும் குணப் படுத்தக் கூடியது என்றும் கருப்பைவாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி மருத்துவ முறைகள் வழக்கத்தில் உள்ளதாகவும், ஹர்ஷமித்ரா மருத்துவமனை யில் இத்தடுப்பூசி மிகக்குறைந்த விலையில் இருப்பதாகவும் கூறினார்.
பாவத்தினாலும் சாபத் தினாலும் புற்றுநோய் ஏற்படு கின்றது என்பதும், புற்று நோய்க்கு சிகிச்சை மேற்கொண் டால்தான் அதிகம் பரவும் என் பதும் மூடநம்பிக்கை சார்ந்த தாகும்.
புற்றுநோய் எதிர்ப்பு ஜீன் கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு மிகக் குறைவு என்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்து வதனால்தான் நாட்டில் அதிக அளவில் புற்றுநோய் பாதிப்பு பெருகி வருதாகவும் தெரிவித்தார்.
புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சைகளான மருந்தியல் சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, நோய் எதிர்ப்பு சிகிச்சை மற்றும் ஹார்மோன் சிகிச்சை போன்ற கூட்டு சிகிச்சைகளை ஹர்ஷமித்ரா மருத்துவமனை வழங்கி வருவதாகவும் தெரிவித்து இம்மாதம் அக்டோபர் 15ஆம் தேதி தமது மருத்துவ மனையில் பெண்களுக்கான மார்பக பரிசோதனைகள் முற் றிலும் இலவசமாக மேற்கொள் வதை பெண்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர் களின் புகைப்படங்கள், மருத் துவ சிகிச்சைகள் வழங்கும் முறைகள் போன்றவற்றை குறும்படக் காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு தெளிவாக விளக்கினார்.
பெரியார் மருந்தியல் கல்லூ ரியின் பேராசிரியர் முனைவர் அ.மு.இஸ்மாயில் மற்றும் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் ச.பிரியதர்ஷினி நன்றியுரை யாற்றினார். இவ்விழிப்புணர்வு கருத்தரங்கில் பெரியார் மருந் தியல் கல்லூரியின் பேராசிரியர் கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டு பயனடைந்தனர்.