மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை உண்டா? ரயில்வே அமைச்சர் மழுப்பல்

3 Min Read

அகமதாபாத், ஜன. 14- ரயில் கட்டண சலுகை மூத்த குடி மக்களுக்கு மீண்டும் வழங்கப் படுமா என்பது குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமான ரயில்வே ஒரு நாளைக்கு ஏராளமான ரயில்களை பல்வேறு பகுதிக ளுக்கு இயக்கி வருகிறது.
இந்திய மக்களின் முக்கிய மான போக்குவரத்தாக ரயில் கள் உள்ளன. சாமானிய மக்கள் அதிகம் பயணிப்பது ரயில்களில் தான். தொலைதூர பயணம் மேற்கொள்ளும் ஏழை எளிய மக்களுக்கும், பிழைப்பு தேடி வெளியூர் அல்லது வெளி மாநிலம் வரும் மக்களுக்கும் வரப் பிரசாதமாக ரயில்கள் உள்ளன.

இந்த ரயில்களில் மூத்த குடி மக்களுக்கு பயண கட்டணத் தில் 50 சதவீதம் வரை சலுகை பல ஆண்டுகளாக அளிக்கப் பட்டு வந்தது. பெண்கள் மூத்த குடிமக்கள் பயணிகளுக்கு 50 சதவீத சலுகையும், வயதான ஆண் மற்றும் திருநங்கைகள் அனைத்து வகுப்புகளிலும் 40 சதவிகிதமும் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டது.
சலுகையைப் பெறுவதற் கான குறைந்தபட்ச வயது வரம்பு ஒரு பெண்ணுக்கு 58 வயதாகவும், ஆணுக்கு 60 வயதாகவும் இருந்து வந்தது.
இந்த சூழலில் கடந்த 2020ஆ-ம் ஆண்டு கரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் நாடு முழுவதும் 3 மாதங்கள் முற்றிலும் முடங் கியது. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலு கையை இந்திய ரயில்வே அப்போது ரத்து செய்தது.

ஆனால், 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரயில் சேவை முழுவதுமாக பழையபடி தொடங்கப்பட்ட நிலையில் இப்போது வரை மூத்த குடி மக்களுக்கு பயண கட்டணத் தில் சலுகை வழங்கப்பட வில்லை. அதேநேரம் 2022-2023ஆம் ஆண்டில் மூத்த குடி மக்கள் பயணிகளுக்கு வழங்கப் பட்ட சலுகையை ரத்து செய்த தன் மூலம் சுமார் 2,242 கோடி ரூபாய் கூடுதல் வருவாயை ரயில்வே ஈட்டியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஒரு கேள்விக்கு பதில் அளித்த ரயில்வே, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையான காலகட்டத்தில், கிட்டத்தட்ட எட்டு கோடி மூத்த குடிமக்க ளுக்கு சலுகைகளை வழங்க வில்லை. சுமார் 4.6 கோடி ஆண்கள், 3.3 கோடி பெண்கள் மற்றும் 18,000 திருநங்கைகள் ஆகியோர் பயணம் செய்தனர்.
இந்த காலகட்டத்தில் மூத்த குடிமக்களான பயணிகளின் மொத்த வருவாய் ரூ. 5,062 கோடியாகும். இதில் சலுகை நிறுத்தப்பட்டதன் மூலமாக ரயில்வே துறையால் ரூ.2,242 கோடி ஈட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரயில்வே வெளியிட்ட தகவலின் படி, 2020ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையான காலக் கட்டத்தில் 60 வயதுக்கு மேற் பட்ட 4.46 கோடி ஆண் பயணி களும், 58 வயதுக்கு மேற்பட்ட 2.84 கோடி பெண் பயணிகளும், 8,310 திருநங்கைகளும் என மொத்தம் 7.31 கோடி மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்கவில்லை.
இந்த நிலையில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், குஜராத்தின் ஆமதா பாத் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் புல்லட் ரயில் திட்டப் பணிகளை 12.1.2024 அன்று நேரில் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அவர் பத் திரிகையாளர்களை சந்தித்த போது, “மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படுமா?” என செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்க வில்லை. அதேநேரம் வேறு கருத்தை அவர் கூறினார்.

அமைச்சர் அஸ்வினி வைஷ் ணவ் கூறுகையில், இந்திய ரயில்வே ஏற்கெனவே ஒவ்வொரு ரயில் பயணிக்கும் ரயில் கட்ட ணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருகிறது.
சேரும் இடத்துக்கான ரயில் பயணச் சீட்டு ரூ.100 என்றால், ரயில்வே கட்டணம் ரூ.45 மட்டுமே. இதன் மூலம் ரூ.55 சலுகையாக அளிக்கப்படு கிறது என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *