தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற
தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு மற்றும் சிறப்புக் கூட்டம்
தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டங்கள் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடை பெற்றன. அதன் விவரம் வருமாறு:
கோவை
கோவை புலியகுளத்தில் 11.1.2024 அன்று மாலை 6 மணி அளவில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது கோவை மாவட்ட திராவிடர் கழக தலைவர் ம.சந்திர சேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் புலிய குளம் க.வீரமணி வரவேற்புரை வழங்கினார்.
தமிழர் தலைவர் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். திமுக துணைப் பொதுச் செயலாளர்ஆ.இராசா எம்.பி. கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: கலைஞர் நூற்றாண்டு விழா, தந்தை பெரியார் பாதையில் பயணித்த அறிஞர் அண்ணா – பெரியார் ஆகியோர் வழியில் சமூக நீதி பாதுக்காக்க சமத்துவ சமுதாயத்தை உருவாக்க 60 ஆண்டு அயராது உழைத்து டாக்டர் கலைஞர் நூற் றாண்டு விழா பொது கூட்டம் கலைஞர் அவர்களின் 60 ஆண்டு கால அரசியல் பணிகளில் அண்ணா வழி யில் அவர் பயணித்தாலும் கூட பெரியாரின் கொள்கை களை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றார்.
வைக்கத்தில் ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் சமத்துவம் தடுக்கப்பட்டது. அங்கே சமத்துவ உரிமை மீட்க தந்தை பெரியார் வைக்கதில் போராட்டத்தில் ஈடுபட்டார். சிறை பிடிக்கப்பட்டு கடுங் காவல் தண்டனை வழங்கப்படுகிறது.
அதையெல்லாம் தாங்கி தொடரும் போராட்டம் அன்று வெற்றி பெறுகிறது. அனைவருக்கும் அங்கே சமத்துவம் நிலை நாட்டபட்டது.
அந்த சமத்துவம் இந்தியா முழுவதும் கிடைக்க வேண்டும் அதற்காக திராவிட இயக்கம் பாடுபடுகிறது. ஆகவே ஜனநாயகமும் சமூக நீதியும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அதற்கு எதிரான மதவாத அரசு ஒன்றிய மோடி – அமித்சா ஆட்சி அவசியம் வீழ்த்தப்பட வேண்டும்.
அதற்கு தந்தை பெரியாரின் தத்துவமே சரியான மருந்து என்பதால் தான் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் 91 வயதிலும் தொடர்ந்து உழைத்து வருகின்றார்.
ஆகவே மாணவர்களே இளைஞர்களே நீங்கள் தந்தை பெரியாரைப் படியுங்கள் – அறிஞர் அண்ணாவை படியுங்கள் – டாக்டர் கலைஞரைப் படியுங்கள் – இந்த மூன்று தலைவர்களை இதயத்தில் ஏந்தி நமது முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உழைத்து வருகின்றார். அவரை பாதுகாப்போம் – ஆதரிப்போம் என்று கூறி உரையாற்றினார்.
முன்னதாக கோவை கு.ராமகிருஷ்ணன், திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், சிபிஅய் மாவட்ட செயலாளர் ந.பத்மநாபன், ஆகியோர் உரையாற்றினார்.
கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா ஜெயக்குமார் தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், நீலமலை மாவட்ட காப்பாளர் டாக்டர் கவுதமன், மற்றும் மாநில இளைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் பிரபாகரன், மாநில பக துணை தலைவர் தரும வீரமணி, கோவை மாநகரத் தலைவர் தி.க.செந் தில்நாதன், திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் இராகுலன், கோவை மாநகர செயலாளர் திராவிட மணி, மாவட்ட துணைத் தலைவர் தமிழ்ச்செல் வன், பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு, மாவட்ட துணை செயலாளர் காளிமுத்து, முனைவர் மு.தவமணி, மாவட்ட மகளிர் அணி தலைவர் முத்துமணி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ச.திலகமணி, மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி, தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணன், தாராபுரம் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் தம்பி பிரபாகரன், திருப்பூர் மாவட்ட காப்பாளர் அவிநாசி ராமசாமி, திருப்பூர் மாவட்ட செயலாளர் ப.குமரவேல், நீலமலை மாவட்ட தலைவர் நாகேந்திரன், நீலமலை மாவட்ட செயலாளர் ஜீவா, மேட்டுப்பாளையம் மாவட்ட செயலாளர் ரங்கசாமி, பொள்ளாச்சி மாவட்ட செயலாளர் அ.ரவிச்சந்திரன், மாவட்ட மகளிர் பாசறை கு.தேவிகா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் த.கவிதா, மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் க.கவுதமன் மற்றும்,திமுக பகுதி செயலாளர் பசுபதி, கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் முனியம்மாள் பாலமுருகன், திமுக 66ஆவது வட்ட திமுக செயலாளர் நவீன் பாலகிருஷ் ணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், கோவை மாநகராட்சி மாவட்ட உறுப்பினர் ஜெயப்பிரதா தேவி, திமுக மாணவர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், தலைமை கழக பேச்சாளர் சிங்கை பிரபாகரன், திமுக பகுதி செயலாளர் சிங்கை சிவா, வீ.பகலவன் மற்றும், விடுதலை வாசகர் வட்ட கு.வெ.கி.செந்தில், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் இரா.வெங்கடாசலம், மாவட்ட பக தலைவர் பெ.சின்னசாமி, செயலாளர் அ.அக்ரிநாகராஜ், ப.க.சூசைராஜ், மாநகர தி.க. அமைப் பாளர் யாழ் வெங்கடேஷ், எட்டிமடை மருதமுத்து, பகுதி கழக பொறுப்பாளர்கள்: சுந்தராபுரம் பகுதி கழக தலைவர் தெ.குமரேசன், செயலாளர் ஜெயக்குமார், வடவள்ளி பகுதி கழக தலைவர் ஆட்டே சக்தி, கணபதி பகுதி கழக தலைவர் கவி.கிருஸ்னண், செயலாளர் சுபா, பீளமேடு பகுதி கழக தலைவர் இரமேஷ், செயலாளர், மற்றும்
வே. தமிழ்முரசு,முத்துமாலையப்பன், கருப்பு சட்டை மாணிக்கம், மே.பா.ரங்கசாமி,வேலாண்டிபாளையம். பிரபு, சேரன்நகர், ஆனந்த், அர்ஜூனன், நியூட்டன், பெரியார் மணி, தி.க ஆனந்த், ஆ. அருண், நா. குரு, ஆவின். சுப்பையா, பெரியார் புத்தக நிலைய, ஜீடி நாயுடு நினைவு பெரியார் படிப்பக காப்பாளர் அ.மு.ராஜா, செல்வகுமார், இருதயராஜ், பொன்ராஜ், இலைக்கடை செல்வம், வெற்றிச்செல்வன், முத்துகணேசன், தி.க ஆறுச்சாமி, சுந்தர்ராஜ், கோபாலகிருஷ்ணன், சா. சிவக் குமார், கணபதி. காமராஜ், பிரபாகரன், அஜித், சூலூர்.
கந்தசாமி, குறிச்சி. ராமமூர்த்தி, சி. கனகராஜ், தமிழரசன், சக்தி, விஜயன், ஆகாஷ், தீனா மூர்த்தி,செ. மதியரசு, மு. தமிழ், செ. கார்த்திக், மு.தரணி,வெ. யாழினி,வெ. இளமதி, மகேஸ்வரி, ஜோதிமணி, கல்பனா, கயல்விழி, சகாயமேரி, பவதாரணி, செ. தனலட்சுமி, பாக்கியா, பு.சுமதி, சித்ரா, சந்திரகலா, தி.ச. கார்முகிலி, தி.ச.யாழினி, திராவிட எழில்,
செ.கவுசல்யா, த.க. யாழினி, ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக கோவை நிமிர்வு கலைக்குழுவினரின் பறை இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிறைவாக பகுதி கழக தலைவர் புலியகுளம் கிருஷ்ணமூர்த்தி நன்றி உரையாற்றினார்.
காஞ்சிபுரம்
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் மற்றும் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் 22.12.2023 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் தந்தை பெரியார் சிலை அருகில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட காப்பாளர் டி.ஏ.ஜி. அசோகன் தலைமை வகித்தார். மாவட்ட பக தலைவர் ந.சிதம்பரம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் கி. இளையவேல், மாவட்ட இணை செயலாளர் ஆ.மோகன், மாநகரத் தலைவர் சா வேலாயுதம், மாநகர செயலாளர் இ.ரவீந்திரன், வாலாஜாபாத் எஸ் செல்வம், திக மகளிரணி தலைவர் ஆர்.ரேவதி ஆகியோர் முன்னிலையில் தலைமை கழக அமைப்பாளர் பு.எல்லப்பன், காஞ்சி மாவட்ட கழக தலைவர் அ.வெ.முரளி தொடக்க உரை யாற்றினர். திமுக இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கழக பேச்சாளர் நாத்திகம் நாகராஜன், காரை. அருளா னந்தம், மதிஆதவன் விசிக, காஞ்சி அமுதன், குறளமிழ் தன், பி.ராசு, ஆ.திருமலை, கா.சேகர், நா.சக்திவேலன், ஆசிரியர் ரத்தின பச்சையப்பன், ஆசிரியர் மகேஸ்வரன், மருத்துவர் மு.குழலரசி, மு.குறளரசு, நா.கார்த்திக்,
நா.அறிவுமணி, பழனி, கனகசபை ஆகியோர் கருத்துரை ஆற்றினார்.
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் நடைபெற்ற நினைவை நினைவு கூர்ந்தும் தந்தை பெரியாரின் கொள் கைகளை அனைவரும் அறியும் வகையில் கொள்கை களை கொண்டு தமிழர் தலைவர் கட்டளைப்படி சனா தனத்தை வீழ்த்துவோம் என்று கூறி சிறப்பு உரையாற் றினார் கழக பேச்சாளர் தஞ்சை இரா பெரியார் செல்வன். இறுதியாக மாவட்ட ப.க. செயலாளர் தா.இளம்பரிதி நன்றி கூறினார்.
வாலாஜாபாத்
தந்தை பெரியார் இறுதி முழக்கம் மற்றும் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்குழு கூட்டம் 28.12.2023 மாலை 6 மணி அளவில் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட இணை செயலாளர் ஆ.மோகன் தலைமை உறையாற்றினார். வாலாஜாபாத் ஒன்றிய தலைவர் எஸ் செல்வம் வரவேற்புரை ஆற்றினார். காஞ்சி உலக ஒளி பகுத்தறிவு பாடல்கள் பாடினார். தலைமை கழக அமைப்பாளர் பு.எல்லப்பன், மாநில இளைஞரணி அமைப்பாளர் மு.அருண், முன்னிலையில மாவட்ட தலைவர் அ.வெ. முரளி, ப.க. மாவட்ட செயலாளர் பா. இளம்பரிதி ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.
விசிக அசோக்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்ரோஸ், ரவிபாரதி, பாலாறு கூட்டியக்க தலைவர் காஞ்சி அமுதன், விசிக மேனாள் மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ், செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக தலைவர் செங்கை சுந்தரம் ஆகியோர் கருத்து ரைக்கு பின் திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் பா.மணியம்மை தந்தை பெரியார் அவர்களின் இறுதிப் பேருரை நிகழ்த்திய 50ஆம் ஆண்டு நினைவு நாள் பேருரை நிகழ்த்தினார்.
மற்றும் சுரேஷ் அமுதவன், டி.ஆர்.பாஸ்கர், மீரான், ஹரிதாஸ், பாலமுருகன், தனஜெயன், ரவிச்சந்திரன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய தலைவர் மா.நரசிம்மன், வாலாஜாபாத் இளங்கோவன், சீதாவரம் மணிவண்ணன், வெங்கட்ராமன், அருங்குன்றம் தேவராஜன், டில்லிபாபு மற்றும் அனைத்து கட்சி தோழர்கள் கலந்துகொண்டனர்.
சங்கராபுரம்
சங்கராபுரத்தில் 23 .12 .2023 சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் மற்றும் 50ஆம் ஆண்டு நினைவு நாள் திராவிடர் கழக பொதுக் கூட்டம் சங்கராபுரம் பேருந்து நிலைய பொதுக்கூட்ட மேடையில் – ஓவிய இமயம் மு.கலைச் செழியன் அவர் களின் நினைவு மேடையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் ம. சுப்பராயன் தலைமை தாங்கினார். சங்கராபுரம் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் பெ. பால சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். கல்லக்குறிச்சி மாவட்ட திராவிட கழகத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர், மாவட்ட செயலாளர் ச.சுந்தரராசன், துணைத் தலைவர் குழ செல்வராசு, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் அ லட்சுமிபதி, தமிழ் வழி கல்வி இயக்கத்தின் மாநில தலைவர் அ. சின்னப்ப தமிழர், எழுத்தாளர் வை.நெடுஞ்செழியன், மாவட்ட திராவிடர் கழக இலக்கிய அணித் தலைவர் பெ.சயராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.எழிலரசன், மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.கரி காலன், கல்லை தமிழ்ச் சங்க செயலாளர் செ.வ.மதி வாணன், சங்கராபுரம் ஒன்றிய திராவிடர் கழக செயலா ளர் கே .மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் தமது சிறப்புரையில் கூறியதாவது: தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப்பட்ட 97 சதவீத மக்கள் கல்வி கற்கும் உரிமை வேலை வாய்ப்பு உரிமை ஆகியவற்றை பறித்து மூன்று சதவீதமாக இருக்கின்ற பார்ப்பனர்களே அனைத்து வேலை வாய்ப்புகளையும் பெற்றார்கள் இதை போக்குவதற்கு தந்தை பெரியார் இட ஒதுக்கீட்டு உரிமையை பெற்று தந்தார் . அதன் விளைவாகத்தான் நாமெல்லாம் இன்று படித்து வேலைவாய்ப்பை பெற்று, மானத்தோடும் அறிவோடும்வாழ்ந்து வருகிறோம். ஆனால் இப்போது ஆளும் ஒன்றிய ஆர்எஸ்எஸ் பிஜேபி அரசனது மீண்டும் நம்மை முன்னேற விடாமல் “நீட் “நுழைவுத் தேர்வை கொண்டு வந்து தமிழக மாண வர்களின் மருத்துவ கனவை நிர்மூலமாக்கியுள்ளனர்.
அதோடு மட்டுமல்லாமல் 29 மாணவர்களின் உயிரை பறித்து விட்டனர். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில், ஆச்சாரியார் காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாக திணித்து நம் மக்களை படிக்க விடாமல் தடுக்கும் முயற்சியை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இதற்கெல்லாம் ஒரு தடுப்பரனாக இருந்து தமிழ்நாட்டை பாதுகாத்து வருகிறார். தந்தை பெரியார் ஜாதி ஒழிப்புக்காக போராடி வெற்றியும் கண்டார். ஆனால் கோயில் கருவறையில் நாம் சென்று வழிபட முடியவில்லை என்று நெஞ்சில் தைத்த முள்ளாகவே எண்ணினார். இதை போக்குவதற்காக கோயில் கருவறை போராட்டம் நடத்த விரும்பினார். இதுதான் இறுதி கட்ட முழக்கமாக இருந்தது. இன்று தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால், இன்று நம் மக்கள் கருவறையில் சென்று வணங்கவும் பூஜை செய்யவும் உரிமையை பெற்றுள்ளோம். இந்த உரிமையை நிலைநாட்டிக் கொள்ள, நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மையை அறவே நீக்கிவிட்டு சுயமரியா தையுடன் நம்மை முன்னேற்றும் வழிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் மானமும் அறிவும் பெற்ற மனிதர்களாக வாழ முடியும்.
இன்று, ஒன்றியத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அரசு தமிழக மக்களை கல்வி வேலை வாய்ப்புகளில் முன்னேற விடாமல் தடுக்கும் வேலைகளில் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆகையால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய அரசை வீழ்த்துவதற்கு இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் தமிழ்நாடும், நாமும், நாம் பெற்ற உரிமைகளை இழக்காமல் சுயமரியா தையுடன் வாழ முடியும் என்று கூறி முடித்தார்.
முன்னதாக, கழகக் காப்பாளர் நெய்வேலி ஜெய ராமன், மாநில மகளிர் அணி காப்பாளர் க.பார்வதி, சங்கராபுரம் பகுத்தறிவாளர் கழக செயலாளர்
இராம.நாராயணன் ஆகியோர் இயற்கை எய்தியமைக்கு கூட்டத்தின் வாயிலாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவர்களின் நினைவை போற்றும் வகையில் இரண்டு நிமிடம் அமைதியாக அனைவரும் எழுந்து நின்றனர்.
இக்கூட்டத்தில் மக்கள் அதிகாரம் பொறுப்பாளர்
ஆ.இராமலிங்கம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வீர.முருகேசன், சங்கராபுரம் ஒன்றிய திராவிட மாண வர் கழகத் தலைவர் மா.ஏழுமலை, சங்கராபுரம் நகர திராவிடர் கழகத் தலைவர் கலை.அன்பரசு, கல்லக்குறிச்சி நகர திராவிடர் கழகத் தலைவர் இரா.முத்துசாமி; செயலா ளர் நா.பெரியார், தோழியர்கள்: அன்புமணி சுப்பராயன், நதியா கரிகாலன், மாரி அன்பழகன், நல்லாசிரியர்
அ. தெய்வநாயகம் வடக்கனந்தல் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கூ.தமிழரசன், சங்கைத் தமிழ்ச் சங்க செயலாளர் சாதிக் பாட்சா, முரார்பாளையம் கிளைக் கழகத் தலைவர் இரா.செல்வமணி, மாவட்ட திராவிட முன்னேற்ற கழக சிறுபான்மை நல உரிமை பிரிவு பொறுப்பாளர் அய்.ஜுல் பிகார் அலி, மணலூர்பேட்டை நகர திராவிடர் கழகத் தலைவர் சி. அய்யனார்; செயலாளர் பா .சக்தி, ஜம்பை கிளைக் கழகத் தலைவர் அ.தமிழரசன்; செயலாளர் வை.சேகர், விஜய் லேபரட்டரி தயாளன், உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ரிஷிவந்தியம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் அர.சண்முகம் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது. கழகத் தோழர்கள் அனை வருக்கும் சிற்றுண்டி அளித்து உபசரிக்கப்பட்டது.