அரசாணைக்கு
அரசு பணிகளில் பதவி உயர்வுக்கான சீனியா ரிட்டி முறையில் மாற்றம் செய்த அரசாணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
பன்னாட்டு…
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் வருகிற 16,17,18ஆம் தேதிகளில் பன்னாட்டு புத்தக கண்காட்சி நடக்கிறது. இதில் 39 நாடுகள் பங்கேற் கின்றன.
காணாமல்…
தமிழ்நாட்டில் 2013 முதல் தற்போது வரை காணா மல் போன 6000 நபர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது.
வெளியீடு
ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய அய்.எப்.எஸ். பதவிகளுக்கான முதன்மை தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 35 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தொற்று உறுதி
இந்தியாவில் இதுவரையில் 1,200 பேருக்கு கரோனா வைரஸின் துணை திரிபான ஜே.என்.1 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக கருநாடகாவில் 215 பேரிடம் ஜோன் -1 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விசாரணை
குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந் துரைகள் வழங்க, ஒரு மாதத்தில் விசாரணைக் குழுவை அமைக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.