நாடாளுமன்றம்
2024ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கலுக்கான கூட்டத் தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அழைப்பு
வேலை நிறுத்த தாக்கீது தொடர்பாக வரும் 19ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு, தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
பாதுகாப்புக்கு…
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு கடைவீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் அசம்பாவிதங்கள் நடை பெறாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல்துறை சார்பாக 50,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிராமசபை
குடியரசு நாளன்று (26.1.2024) கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து கிராம மக்களும் பங்கேற்கும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் அறி வுறுத்தியுள்ளார்.
பள்ளிகளில்…
தமிழ்நாடு அரசின் பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள பழுதடைந்த கட்டடங் களின் விவரங்களை செயலி வழியே பதிவு செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக இரண்டாவது முறை யாக ஒன்றிய அரசின் குழுவினர் நேற்று (12.1.2024) ஆய்வு மேற்கொண்டனர்.
தேசிய வாக்காளர் நாள்
தேசிய வாக்காளர் நாளை முன்னிட்டு மாநில அளவில் பொதுமக்களுக்கான வினாடி வினா போட்டி 21ஆம் தேதி (காலை 11 மணி முதல் 11.15 வரை) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லீttஜீs://ஷ்ஷ்ஷ்.மீக்ஷீஷீறீறீs.tஸீ.ரீஷீஸ்.வீஸீ/ஹீவீக்ஷ்2024 இணையதள முகவரியில் பெயர் மற்றும் விவரங்களை வருகிற 18, 19இல் மட்டும் பதிவு செய்யலாம்.
இழப்பீடு
சென்னை எண்ணூரில் அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செய்திச் சுருக்கம்
Leave a Comment