‘மகர சங்கராந்தி’ என்பதுதான் சரியாம்! பொங்கல் என்று ஒரு விழாவே கிடையாதாம்! பி.ஜே.பி. நிர்வாகியின் பார்ப்பனப் புரட்டு!

2 Min Read

சென்னை, ஜன.12 பொங்கலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் தமிழ் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலை யில் பொங்கல் என்ற விழாவே இல்லை என்று குறிப்பிட்டு, மத வெறுப்பை பரப் பும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார் பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண் டாடப்பட இருக்கிறது. தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என வாரம் முழுவதும் விடுமுறை கொண்டாட்டங்கள் என தமிழ்நாடே களைகட்டப்போகிறது. உலகம் முழு வதும் உள்ள தமிழர்கள் ஜாதி, மதம் கடந்து ஒன்றாக உற்சாகமாக கொண் டாடும் விழாவாக உள்ளது பொங்கல் தான். தமிழர்களாக அனைவரும் ஒன் றிணைந்து கொண்டாடும் சமத்துவத் திருநாளாக இது உள்ளது.

விவசாயிகளின் பயிர் அறு வடையை மய்யமாக கொண்டு கொண்டாடப்படும் இந்த நாளில் பச்சரிசி பொங்கல் வைத்து, கரும்பு சுவைத்து, புத்தாடை அணிந்து உறவினர்கள், நண்பர்களுடன் கொண் டாடி மகிழ்வார்கள். மறுநாள் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக் கட்டு, மஞ்சு விரட்டு போன்றவை, பானை உடைத்தல் போன்ற கிராம விளையாட்டு களும் நடத்தப்படுவது வழக்கம்.
இப்படி வாரம் முழுக்க பொங்கலை கொண்டாட மக்கள் தயாராகி வரு கிறார்கள். இதற்காக புத்தாடை, கரும்பு, மளிகை பொருட்களை வாங்க கடை களில் கூட்டம் அலை மோதி வருகிறது. தமிழ்நாடு அரசும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.1000 பரிசுத் தொகை போன்றவற்றை வழங்கி வருகிறது. இப்படி தமிழ்நாடே பொங்கல் கொண் டாட்டத்திற்கு தயாராகி வரும் நிலையில் பொங்கல் என்ற விழாவே இல்லை என்று தெரிவித்து இருக்கிறார் பா.ஜ.க. பிரமுகர் பரமேஸ்வரி.

தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து அவர் பதிவிட்டு உள்ளதாவது:
“பொங்கல் என்று ஒரு விழாவே கிடையாது. எந்த தமிழ் இலக்கியத்திலும் இது போன்று சான்று கிடையாது. மகர சங்கராந்தி என்பதுதான் தை 1 மகர சங் கராந்தி என்று கொண்டாடினால் கிறிஸ்து வமும் இஸ்லாமும் சமத்துவம் என்ற வேசம் கட்டி இங்கு உட்புகுந்து விளை யாட முடியாது. அதனால் மகர சங்கராந்தி என்ற விழாவின் காரணப் பெயரை நீக்கிவிட்டு பொங்கல் என்ற காரியப் பெயரை உட்பகுத்தி பின்பு அதை திரித்து சமத்துவப் பொங்கல் என்று பெயரிட்டு வந்தேறி மதமாறிகள் நமது கலாச்சாரத் திற்குள் ஊடுருவ வழிவகை செய்து செருப்புக் காலுடன் பொங்கல் வைக்கும் பழக்கத்தை உருவாக்கி விட் டார்கள்.
சிறிது காலத்திற்குப் பிறகு சூரியனையும் நீக்கிவிட்டு இரவுப் பொங்கல் நிலாப் பொங் கல் என்று மாற்றி வைத்து விடுவார்கள். கடைசியில் பிறைப் பொங்கல் என்று மாற்றினால் கூட வியப்பில்லை. இனியும் இந்த பித்தலாட்டத்தை அனுமதிக்க மாட் டோம். சிதைக்கப்பட்ட தமிழர் கலாச்சாரத்தை மீட் டெடுப்போம். இனி எங்களுக்கு தை 1 மாதப் பிறப்பில் மகர சங்கராந்தி விழாதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *