காரைக்குடி, ஜன. 12- தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு நாளையொட்டி கல் லூரி மாணவர்கள் பங்கேற்ற பேச்சுப் போட்டி காரைக்குடி மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பில் காரைக்குடி, குறள் அரங்கில் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட தலைவர் விஞ்ஞானி சு. முழுமதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட கழக காப்பாளர், சாமி திராவிட மணி, மாவட்ட தலைவர், ம.கு.வைகறை, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் ந.செல்வராசன், ப.க மாநில அமைப் பாளர் ஒ.முத்துக்குமார், மாவட்ட செய லாளர் சி.செல்வமணி,
ப.க. மாவட்ட அமைப்பாளர் செல் வம் முடியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து ப.க மாநில துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு. கண்மணி தனது உரையில்
தந்தை பெரியாரின் போராட்டத்தால் பெண்கள் அடைந்த முன்னேற்றத்தை யும், சமூக பொருளாதார மாற்றத்தையும் எடுத்து எடுத்துரைத்து, பேச்சுப் போட் டியில் பங்கேற்ற மாணவர்களை வாழ்த் திப் பேசினார்.
பல்வேறு கல்லூரிகளில் இருந்து பங்கேற்ற 21 போட்டியாளர்களும் தனித் தன்மையோடு பெரியாரின் ஜாதி ஒழிப்பு, பெண்விடுதலை, மானுட விடுதலை , மூடநம்பிக்கை ஒழிப்பு என பல்வேறு தளங்களில் எடுத்துரைத்தனர்.
நடுவர்களாக முனைவர் ப.சு.செல்வ மீனா (அழகப்பா அரசு கலைக் கல்லூரி), முனைவர் இரா.அனிதா( அழகப்பா அரசு கலைக் கல்லூரி), முனைவர் இரா.கீதா( இராமசாமி தமிழ்க் கல்லூரி) ஆகி யோர் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.
நா.நவீன்(அழகப்பா பல்கலைக்கழ கம்) முதல் பரிசினையும், சீ.ராஜபாரதி (சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி) இரண்டாம் பரிசினையும், சிறீதேவி (அழகப்பா கல்வியியல் கல்லூரி), ந. முகமது கைப் (வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி) ஆகியோர் மூன் றாம் பரிசினைப் பகிர்ந்து பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வில் நகர கழக தலைவர் ந.ஜெகதீசன், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் அ.ஜோசப், மகளிர் அணி இள.நதியா, கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வி.பாலு, பகுத்தறிவு எழுத் தாளர் மன்ற மாவட்ட அமைப்பாளர் குமரன் தாஸ், நகர கழக அமைப்பாளர் ஆ.பால்கி, கா.கண்ணையா, பேராசிரி யர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் அணி தோழர் த.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.