பிரயாக்ராஜ், நவ. 24 – ‘எனக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, ‘டிரான்ஸ்பர்’ செய் யப்பட்டேன்’ என, பணி ஓய்வு பெற்ற அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரிதின்கர் திவா கர் புகார் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் அமைந்துள்ள, அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பிரிதின்கர் திவாகர், ஓய்வு பெற்றார். இதையொட்டி நடந்த பிரிவுபசார நிகழ்ச் சியில் அவர் பேசியதாவது:
சத்தீஸ்கர் உயர் நீதி மன்ற நீதிபதியாக, 2009 இல் நியமிக்கப்பட்டேன். கடந்த, 2018இல் அலகா பாத் உயர் நீதிமன்றத்துக்கு என்னை பணியிட மாற் றம் செய்து, உச்ச நீதி மன்றத்தின், கொலீஜியம் பரிந்துரை செய்தது.
அப்போது உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி யாக இருந்த தீபக் மிஸ்ரா, ஒரு தவறான நோக்கத்து டன் என்னை பணியிட மாற்றம் செய்தார். எனக்கு தொந்தரவு அளிக்க வேண் டும் என, அவர் நினைத்தார்.
ஆனால், தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்தார். என்னை இந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்தார்.
இவ்வாறு அவர் பேசி னார்.
நீதிபதிகளே, நீதிபதி களை நியமிக்கும், கொலீ ஜியம் முறை குறித்து சர்ச்சை உள்ளது.
இது தொடர்பாக, நீதித் துறைக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற் படுகிறது. இந்நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பிரிதின்கர் திவாகர் கூறியுள்ள புகார், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.