10.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இந்தியா கூட்டணியில் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று டில்லியில் அவசர ஆலோசனை நடத்துகிறார். ஜன.15ஆம் தேதிக்குள் இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
* மகாராட்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டதாக சரத் பவார் தகவல்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ராமர் கோயில் திறப்பு விழா மூலம் வித்தை காட்டுகிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு.
* இந்தியா கூட்டணியில் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான கட்சியும் சேர்ந்தது.
தி இந்து:
* முடிவடையாத ராமர் கோவில் ‘கும்பாபிஷேகத்தை’ ‘அரசியலாக்குவதாக’ மதத் தலைவர்கள் சாடுகின்றனர்; மதத் தலைவர்கள் செய்ய வேண்டியதை மோடி செய்வ தாகவும் குற்றச்சாட்டு.
* கட்சி எம்எல்ஏக்கள், மேனாள் எம்எல்ஏக்களை சந்தித்தார் அகிலேஷ்; ஜனநாயகத்தை காப்பாற்ற 2024 தேர்தல் முக்கியமானது எனப் பேச்சு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர் தேர்வு குழுக்களை உருவாக்கும் அறிவிப்புகளை தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி திரும்பப் பெற்றார்
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment