ஒத்திவைப்பு
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, மார்ச் 3ஆம் தேதி நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அத்தேர்வு ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தகவல்.
எச்சரிக்கை
நெல்லையில் பலத்த மழை பெய்து வருவதால் தாமிர பரணி ஆறு இரு கரைகளையும் தொட்டவாறு பாய்ந் தோடுகிறது. குறுக்குத்துறை முருகன் கோவிலை தண் ணீர் சூழ்ந்தபடி செல்கிறது. இதையடுத்து, தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு
தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அனைத்துப் பிரிவுகளிலும் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும், இதுகுறித்து அரசு கருத்து தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா…
தமிழ்நாட்டில் நேற்று 312 பேருக்கு கரோனா பரி சோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் 11 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேருக்கும், கோவை, காஞ்சிபுரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 16 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
நியமிக்க…
தமிழ்நாடு அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் பதவிக்கு தகுந்த அதிகாரிகளை 6 வாரத்துக்குள் நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
செய்திச் சுருக்கம்
Leave a Comment