உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு
புதுடில்லி, ஜன.10- முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்புப் பணியை மேற்பார்வைக் குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய ஜோ.ஜோசப் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக் களை உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையி லான அமர்வு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி விசாரித்தது.
அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே, முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்கான பொருட்களை எடுத்துச்செல்ல வல்லக்கடவு-முல் லைப் பெரியார் காட்டுச்சாலையை தமிழ்நாடு பயன் படுத்த அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு குழு சார்பில் ஆஜரான வழக்குரை ஞரும் தனது கருத்துகளை முன் வைத்தார்.
அனைத் துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசார ணையை ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.
ஆனால், ஆகஸ்டு மாதம் வழக்கு விசாரணைக்கு வரவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அணையை பலப்படுத் தும் பணிகள் நிறைவடைந்த பிறகு, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புத் தொடர்பான ஒருங்கிணைந்த அர்த்தமுள்ள ஆய்வை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும். முல்லைப் பெரியாறு அணை நீரியியல் ரீதியாகவும், நில அதிர்வுகளை தாங்கும் வகையிலும், கட்டுமான வகையிலும் வலுவாக உள் ளது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பரா மரிப்பு பணியை மேற்பார்வைக் குழு மட்டுமே மேற் கொள்ள உத்தரவிடும் கேரள அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.