மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு
சென்னை, ஜன. 9- காய்ச்சல் பாதிப் புள்ள பகுதிகளில்சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
மழைக்காலத்தில் டெங்கு, சிக்குன் குனியா, இன்ஃப்ளூயன்ஸா, எலிக் காய்ச்சல், காலரா உட்பட பல்வேறு நோய்த் தொற்றுகள் பரவக்கூடும் என் பதால் கடந்த அக்டோபர் 29ஆ-ம் தேதி முதல் டிசம்பர் 30ஆ-ம் தேதிவரை 10 வாரங்களுக்கு வாரந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்களை தமிழ்நாடு சுகாதாரத் துறை நடத்தியது.
இந்த முகாம்களில் ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்றனர். இந்நிலை யில், கடந்த சில நாட்களாகத் தமிழ் நாட்டில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால்காய்ச்சல் பாதிப்பு கள் அதிகரித்து வருகின்றன. அதனால், மீண்டும் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்டபோது, “தமிழ்நாட்டில் தற் போது பருவ கால தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்குன் குனியா மற்றும் எலிக் காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் மிகவும் குறை வாகவே உள்ளன. தற்போதைய சூழ லில் கரோனா மற்றும் இன்ஃப்ளூ யன்ஸா தொற்றுகள் மட்டுமே வேக மாகப் பரவுகின்றன.
அதற்கான தடுப்பு மற்றும் விழிப் புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மழைக்கால சிறப்பு மருத் துவ முகாம்கள் சிறப்பாக நடத்தி முடிக் கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாகக் காய்ச்சல் மற்றும் வேறு வகையான தொற்று பாதிப்புகள் அதிகமாக உள்ள பகுதிகளில் மட்டும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவப் பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்” என்று செல்வ விநாயகம் தெரிவித்தார்.