புதுடில்லி, ஜன. 8- மக்களவை தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக 8 மாநிலங்களுக்கு தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
ராஜஸ்தான், கேரளா, தெலங் கானா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய 8 மாநிலங் களில் தேர்தல் கமிட்டி அமைக்கும் முன்மொழிவுக்கு காங்கிரஸ் தலை வர் கார்கே ஒப்புதல் அளித்துள் ளார். அத்துடன், மத்தியப் பிரதேச தேர்தல் கமிட்டி மற்றும் அரசியல் விவகாரக் குழு அமைப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில பிசிசி (பிர தேச காங்கிரஸ் கமிட்டி) தலைவ ராக கோவிந்த் சிங் தோதஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் மேனாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டும் உறுப்பின ராக இடம்பெற்றுள்ளார். மகேந் திரஜீத் சிங் மால்வியா, மோகன் பிரகாஷ், சி பி ஜோஷி, ஹரிஷ் சவுத்ரி, ராம்லால் ஜாட், பிரமோத் ஜெயின் பயா, பிரதாப் சிங் கச் சாரியாவாஸ், உட்பட பலர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர, இளைஞர் காங்கிரஸ் தலைவர்,என்எஸ்யுஅய் தலைவர், சேவாதளத் தலைமை ஒருங்கிணைப்பாளர், பிரதேச மகிளா காங்கிரஸ் தலைவர் ஆகி யோரும் குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
கேரள தேர்தல் குழு தலைவராக கே.சுதாகர் நியமிக்கப்பட்டார். மூத்த தலைவர்களான ஏ.கே.ஆண் டனி, கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா, வயலார் ரவி, வி.டி.சதீஷன், கே.சுரேஷ், சசி தரூர், முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பிரதேச தேர்தல் குழு தலைவராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த குழுவில் துணை முதலமைச்சர் பட்டீப் விக்ரமார்க்க மல்லுவும், உத்தம் குமார் ரெட்டி மற்றும் ஹனுமந்த ராவ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இமாச்சல தலைவராக பிரதீபா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போன்று, ம.பி.யில் ஜிதேந்திர சிங் தலைமையில் அரசியல் விவகாரக் குழுவையும் காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.
சத்தீஸ்கர் தேர்தல் குழுவின் தலைவராக தீபக் பைஜ் நியமிக் கப்பட்டுள்ளார். இதில் சரண் தாஸ் மஹந்த் மற்றும் தாம்ரத்வாஜ் சாஹு ஆகியோருடன் மேனாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் மற்றும் மேனாள் துணை முதல மைச்சர் டிஎஸ் சிங் தியோ ஆகி யோர் உறுப்பினர்களாக இருப்பர்.மணிப்பூரில் பிரதேச தேர்தல் குழுவின் தலைவராக கே மேகசந் திர சிங்நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகாலாந்து பிரதேச தேர்தல் குழுவின் தலைவராக எஸ் சுபோங் மேரன் ஜமீரும், திரிபுரா பிரதேச தேர்தல் குழுவின் தலைவராக ஆசிஷ் குமார் சாஹாவும் நியமிக் கப்பட்டுள்ளனர்.