தமிழ்நாட்டை அதிக நாட்கள் ஆண்ட ஒரே முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் – ஏறக்குறைய 7000 நாட்கள்.
1. 1969 – 1971, 2. 1971 – 1976, 3. 1989 – 1991, 4. 1996 – 2001, 5. 2006 – 2011.
அய்ந்து முறை முதலமைச்சராக ஆனவர். அதில் இருமுறை அவருடைய ஆட்சி முன்னதாகவே கலைக்கப்பட்டது.
1971 – 1976இல் ஆட்சி முடிய இன்னமும் நாட்கள் இருந்தபோது, நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி, இந்திரா காந்தி ஆட்சியை கலைத்தார்.
எம்.ஜி.ஆருடன் கைகோர்த்து, தொடர்ந்து மூன்று முறை கலைஞர் தோற்கடிக்கப்பட்டார்.
வீழ்த்தவே முடியாத சக்தியாக எம்.ஜி.ஆர் கட்டமைக்கப்பட்டிருந்த பொழுதில், இயற்கை அதைப் பொய்யாக்கியது !
1989 – 1991இல் தான் மிக அநியாயம். பொய்யான காரணம் காட்டி இரண்டே ஆண்டுகளில் கலைத் தார்கள். கலைத்தவர் சந்திரசேகர். ஆனால் அதைக் கைகோர்த் துச் செய்தது ராஜீவ் காந்தி + ஜெயலலிதா.
புலிகளுடன் தொடர்பு எனப் பொய் கூறி கலைத்து விட்டு, பழியையும் தி.மு.க. மீதே சுமத்தினார்கள். மக்கள் நம்பி தி.மு.க.வுக்கு மாபெரும் தண்டனையைக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு தங்களுக்குத் தாங் களே அந்தத் தண்டனையைக் கொடுத்துக் கொண் டனர்!
ஆமாம், ஜெயலலிதா அவர்களை அய்ந் தாண்டுகள் ஆளச்செய்தனர் !
அதன்பின்னரும் இருமுறை முழுமையாக அய்ந்தாண்டுகள் ஆண்டார் கலைஞர்.
காமராஜர் = 9 ஆண்டுகள், பக்தவச்சலம் = 4 ஆண்டுகள், அண்ணா = 2 ஆண்டுகள், எம் ஜி ஆர் = 10 ஆண்டுகள், ஜெயலலிதா = 13 ஆண்டுகள், எடப்பாடி பழனிச்சாமி = 4 ஆண்டுகள்
இவர்களைத் தவிர ஏனையோர் ஆண்டதெல்லாம் சொற்ப ஆண்டுகள்தான் !
கலைஞர் சாதனையை தி.மு.க. தான் முறியடிக்க லாமே தவிர வேறு யாரும் நெருங்கக் கூட முடியாது!
மக்கள் ஏன் தி.மு.க.வை பலமுறை நிராகரித்து, அ.தி.மு.க.வுக்கு அதிக முறை வாய்ப்பளித்தனர் ?
ஊடகங்கள் ஏன் தி.மு.க. ஆட்சியென்றால் வெறி கொண்டு விமர்சிக்கின்றன ?
அரிய பல திட்டங்களை இந்தியாவுக்கே முன் மாதிரியாக கொண்டு வந்தும் நம்மை அவர்கள் கொண்டாடுவதில்லையே? என்கிற அங்கலாய்ப்பு அர்த்தமுள்ளது தான்.
அவர்களால், மக்கள் பல சந்தர்ப்பங்களில் குழம்பியிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.
அதுபோக பல பெருஞ்சதிகளும் திமுகவை வீழ்த்துவதில் குறியாக இருந்து, அவைகள் சாதிக்கவும் பட்டுள்ளன.
1) கள்ள ரயிலில் மஞ்சப்பையுடன் என்கிற பொய்!
2) இராமன் உருவத்தை இழிவு செய்ய ஊக்கு வித்தார்கள் என்கிற ஊடகப்பொய் !
3) சர்க்காரியா சொன்னதாக விஞ்ஞான ரீதியிலான ஊழல் என்கிற பச்சைப்பொய் !
4) புலிகளுடன் தொடர்பு – ராஜீவ் கொலையில் உடந்தை என்கிற கொடூரப் பொய் !
5) 2-ஜியில் சுருட்டி னார்கள் என்கிற மிகை கற்பனைப் பொய் !
1976 – 2021 வரையிலான 45 ஆண்டுகளில், பல முறை தோற்கடிக்கப்பட்ட கட்சியாக தி.மு.க. இருந் தாலும், அது கலகலக்கவில்லை, வீழவில்லை, சாய வில்லை, நொறுங்கவில்லை, கலையவில்லை. அழிய வில்லை !
அந்த இடத்தில் எந்த ஒரு மாநிலக் கட்சியையும் நீங்கள் ஒப்பிட்டுக் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது !
அதிலும் கடந்த இரண்டரை ஆண்டுகால மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 99% ஊடகங்களை தன் கைக்குள் போட்டுக்கொண்டு, 99% சமூகவலைத் தளங்களை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, ஒரே ஒரு நொடி கூட நம்மிடம் நட்பு பாராட்டாது, நாளொரு அவதூறும், பொழுதொரு பொய்யுமாக ஆட்டுவிக்கிறது ஒன்றிய அரசு.
ஆனால் அவைகளை இடக்கையால் புறந்தள்ளி, தினமும் ஒரு MNC தொழிற்சாலை தொடங்க ஒப்பந்தம், மாபெரும் கனவுத் திட்டங்கள், சாமானியர் களுக்கு ரொக்க உதவித்தொகைகள் என சிக்ஸர்களாக அடித்து விளாசுகிறார் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் !
அன்று போலில்லாமல் இன்று உடனுக்குடன் பொய்களை உடைக்கிறோம். அவதூறுகளை உரித்தெறிகிறோம். முதலில் அவர்களுடையப் பொய்கள் பரவி அனைவருடைய மனத்தையும் குழப்பி வைத்தாலும், பின்னாலேயே நம்முடைய உண்மைகளும் அவர்களைச் சென்றடைகிறது. குழப்பம் தீர்கிறது – மனம் தெளிவடைகிறது. அவர்கள் பொய்களை மட்டுமே பரப்புகிறார்கள் என்கிற முத்திரை ஆழமாக அனைவரின் மனத்திலும் போய் குத்தி நிற்கிறது !
இதை மட்டும் நம்மால் சலிக்காமல் செய்ய முடியு மெனில் அதுதான் தி.மு.க. ஆட்சியை நிரந்தரமாக நீட்டிக்க உதவும்.
ஊடகங்கள் எவ்வளவு மகாபொய்களைச் சொல் லியும் மக்களை அவர்களால் அடியோடு மாற்ற இயல வில்லை என்பதிலேயே அவர்கள் வீழ்ந்துவிட்டனர். தி.மு.க. அழிந்துவிடுமென்று அது துவக்கப்பட்ட நொடியிலிருந்து எதிரிகளும், துரோகிகளும் பிதற்றிக் கொண்டுதானிருந்தனர், இருக்கின்றனர், இருப்பார்கள். ஆனால் அவர்கள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து முளைக்கும் மரங்கள் – பட்டுப்போய், என்றேனும் கல்மரங்களாய் கூட ஆகலாம் தி.மு.க. அழியாது!!!
– ராஜா ராஜேந்திரன், சென்னை
வீழவில்லை! சாயவில்லை! நொறுங்கவில்லை! கலையவில்லை! அழியவில்லை !
Leave a Comment