காரைக்குடி, ஜன.8- காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சு. முழுமதி தலைமையில், ப.க. மாநில அமைப்பாளர் ஒ .முத்துக்குமார், ப.க துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு.கண்மணி முன்னிலை யில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட கழக காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்ட கழக தலைவர் ம.கு.வைகறை, மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி, மாவட்ட கழக துணைத் தலைவர் கொ.மணி வண்ணன், நகர கழக தலைவர் ந.ஜெகதீசன், தி.தொ.க செயலாளர் சொ.சேகர், சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கணேசன், ப.க தோழர் நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். கூட் டத்தில், தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு ஆண்டினை முன் னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை சிறப்பாக நடத்துவதெனவும், பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினர் சேர்க் கையை விரைந்து செயல்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு
Leave a Comment