உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு! தமிழர் தலைவர் வரவேற்பு

viduthalai
0 Min Read
asiriyar veeramani

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் திணிப்பது சட்டப்படி தவறானது என்பதும் விளங்கி விட்டது. கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் வரக் கூடியது. அதனைப் புறக்கணித்து, ஒன்றிய அரசு அவசர அவசரமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியது.
தமிழ்நாடு, கருநாடக மாநிலங்களில் இதனை செயல்படுத்த முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு என்பது மாநில உரிமைகளைத் தன் விருப்பம் போல் பறிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் செயல்பாட்டுக்கு மரண அடியாகும்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.1.2024

Share This Article
1 Comment
  • காத்திருந்து ஆர்பாட்டமில்லாமல் கோவில் கட்டி காசு பார்க்கும் வித்தையில் கைதேரந்தவர்கள் மக்கள் கூடும் பேரூந்து நிலைய வளாகத்தை விடவில்லை. அரசு ஆணைக்கு முரணாக எழுப்பப்பட்டுள்ள கோவிலை பயணிகள் ஓயவறையாக மாற்றிட அரசு முன்வரவேண்டும். தவறினால், எதிர்காலத்தில் குடமுழுக்கு, பால் காவடி போன்ற பக்த சேட்டைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என்பதை கவனித்தால் கொண்டு தொடக்கத்திலேயே இத்தைகைய நடவடிக்கைகளை களைவது ஆள்வோரின் கடமை. நாளை பிற மத வழிபாட்டு தலங்களும் தடம் பதிக்க உரிமை கோரும் சூழலை கருத்திலிருத்தி துரித நடவடிக்கை தேவை. உரிய நேரத்தில் சுட்டிக்காட்டிய பகுத்தறிவாளர் கழகத்தினரின் சமூக விழுப்புணர்வு சுட்டலுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *