சென்னை,அக்.18- சிறந்த கல்விக் கட்ட மைப்பு கொண்டுள்ளதற் காக மாநிலக் கல்லூரிக்கு இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் சிறப்பு அங்கீகாரம் வழங் கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், தென்னிந்தியா வின் முதல் கல்லூரியாக சென்னை மாநிலக் கல் லூரி நிறுவப்பட்டது.
சென்னை திருவல்லிக் கேணி அருகே நூற்றாண் டைக் கடந்து இயங்கி வரும் மாநிலக் கல் லூரி பல்வேறு அறிஞர்களை உருவாக்கிய பெருமைக் குரியது.
தற்போதும் தேசிய அளவிலான தரவரிசை யில் முதன்மையான கல்வி நிறுவனமாக மாநிலக் கல்லூரி திகழ் கிறது.
ஒன்றிய அரசின் 2023ஆம் ஆண்டுக்கான தேசிய தரவரிசைப் பட் டியலில் (என்அய்ஆர் எஃப்) சிறந்த கல்லூரி வரிசையில் 3-ஆவது இடத்தை மாநிலக் கல் லூரி பிடித்துள்ளது. அதன்தொடர்ச்சியாக மாநிலக் கல்லூரிக்கு மற் றொரு சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஒவ்வொரு துறையி லும் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஅய்எஸ்) சார்பில் தரச்சான்று அளித்து கவுரவிக்கப்படுகிறது.
அந்தவகையில், தமிழ் நாட்டில் சிறந்த தரமான கல்வி கட்டமைப்பு கொண்டுள்ள சென்னை மாநிலக் கல்லூரி உட்பட 4 கல்லூரிகளுக்கு ‘கல்விக் கான மேலாண்மை திட்ட உரிமம்’ எனும் சிறப்பு அங்கீகாரம் பிஅய்எஸ் அமைப்பால் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மாநிலம் முழுவதும் அரசு, தனி யார் என 300-க்கும் மேற் பட்ட கல்லூரிகள் விண் ணப்பித்த நிலையில் 4 கல்லூரிகளுக்கு மட்டுமே இந்த சிறப்புத் தகுதி கிடைக்கப் பெற்றுள்ளது. அதில் மாநிலக் கல்லூரி மட்டுமே அரசுக் கல்லூரி யாகும். இந்த அங்கீகாரம் பெரும் சாதனையாகும். அனைவரின் கூட்டு உழைப் புக்கு கிடைத்த பரிசாக இதைக் கருதுவதாக கல் லூரி முதல்வர் ஆர்.ராமன் மகிழ்ச்சியுடன் தெரிவித் தார்.
இதே போல, ஆவின் (தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு இணையம்), சிறீசாய்ராம் பொறியியல் கல்லூரி (சென்னை), சிறீசாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (சென்னை), எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (காட்டாங் கொளத்தூர்) ஆகிய நிறுவ னங்களுக்கும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சிறப்பு அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது.