தந்தை பெரியார் நினைவு நாள் பேச்சுப் போட்டி

viduthalai
1 Min Read

விருதுநகர், ஜன. 7- விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் நினைவு நாளை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 6.1.2024 சனி காலை 9 மணியளவில், விருதுநகர் சி.பி.அய். அலுவலக அரங்கில் நடைபெற்றது.

மாவட்ட கழக தலைவர் கா.நல்லதம்பி தலைமையில், பொதுக் குழு உறுப்பினர் வெ.புகழேந்தி, காப்பாளர் அ.தங்கசாமி ஆகி யோர் முன்னிலையில், மாவட்ட ப.க. அமைப்பாளரும், சாத்தூர் நகர்மன்றத் துணைத்தலைவருமான பா.அசோக், மாவட்ட ப.க. தலைவர் பெ.த.சண்முகசுந்தரம்,‌ அருப்புக்கோட்டை நகர ப.க. அமைப்பாளர் ச.சண்முகநாதன் ஆகியோர் நடுவராக அமர்ந்து போட்டியை நடத்தினர்.

விருது நகர் சி.பி.அய். செயலாளர் தோழர் முத்துக்குமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்துரையாற்றி னார். மாவட்ட செயலாளர் விடு தலை தி.ஆதவன் நிகழ்வை ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.

சிவகாசி அரசுக் கல்லூரி மாணவி ம.பொன்நந்தினி முதலி டம் பெற்றார். விருதுநகர் கல்லூரி மாணவர் மு.இராமச்சந்திரன் இரண்டாம் இடமும், சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி மாணவி த.மகாதேவி மூன்றாமிடம் பெற்றனர். முதல் பரிசுக்கான தொகை ரூ.3000 அருப் புக்கோட்டை தோழர் நா.நாராயணன், இரண்டாம் பரிசுத் தொகை ரூ.2000 சிவகாசி மாநகர பகுதிச் செயலாளர் ச.சுந்தரமூர்த்தி, மூன்றாவது பரிசுத் தொகை ரூ.1000 பெ.த.சண்முக சுந்தரம்‌ மற்றும் ஆகியோர் வழங்கினர்.

போட்டியில் பங்கேற்ற அனை வருக்கும் சான்றிதழும் இயக்க இதழ்கள் மற்றும் உண்மை, பெரியார் பிஞ்சு வழங்கப்பட்டது. புரவலர் ந.ஆனந்தம், மா.பாரத், மாவட்ட இளைஞரணிச் செயலா ளர் இரா.அழகர், அருப்புக்கோட்டை நகர இளைஞரணிச் செயலாளர் க.திருவள்ளுவர், ஒன்றியச் செயலா ளர் இரா.முத்தையா, முத்துக் குமார், சங்கரராஜ் மற்றும் தோழர் கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *