புதுடில்லி, ஜன. 6- கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கில், ஷாஹி ஈத்கா மசூ தியை அகற்றக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதி மன்றமும் தள்ளுபடி செய்தது.
உத்தரப்பிரதேசத்தில் முதல மைச்சர் யோகி ஆதித்யநாத் தலை மையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங் குள்ள மதுராவில், கடவுள் கிருஷ்ணர் பிறந்ததாகக் கூறப் படும் நிலம் தொடர்பான பிரச் சினை இருந்து வருகிறது.
இங்குள்ள கிருஷ்ணர் கோவிலை ஒட்டி, ஷாஹி மஸ்ஜித் இத்கா என்ற மசூதி அமைந்துள்ளது. முகலாய ஆட்சியின் போது இங்கிருந்த கோவில் இடிக்கப்பட்டு, அதன் மீது, இந்த மசூதி கட்டப்பட்டு உள்ளதாக நீண்டகாலமாக சர்ச்சை உள்ளது.
கடந்த 1968இல், சிறீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தான் மற்றும் ஷாஹி மஸ்ஜித் இத்கா அறக்கட்டளை இடையே ஒப்பந் தம் கையெழுத்தானது.
இதன்படி சர்ச்சைக்குரிய நிலத்தில், 10.9 ஏக்கர் நிலம் கோவி லுக்கும், மீதமுள்ள, 2.5 ஏக்கர் நிலம் மசூதிக்கும் பிரிக்கப்பட்டன.
ஆனால், மொத்தப் பகுதியும் கோவிலுக்கு சொந்தமானது என, ஹிந்துக்கள் தரப்பில் வழக் குகள் தொடரப்பட்டுள்ளன. மதுரா நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகள், அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.
இந்நிலையில், மசூதி இடத் தில் தொல்லியல் துறை சார்பில் களஆய்வு செய்யவும், மசூதியை அகற்ற உத்தரவிடக்கோரியும், வழக்குரைஞர் மஹெக் மகேஷ்வரி என்பவர் அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் பொதுநல மனு தாக் கல் செய்தார்.
இந்த மனுவை, உயர் நீதிமன் றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், இவ்வழக்கில் நேற்று (5.1.2024) உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவில், ‘கிருஷ்ண ஜென்ம பூமிக்கு உரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு உரிமையியல் வழக்குகள் தற் போது நிலுவையில் உள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் மேலும் பல வழக்குகள் வேண் டாம்.
பொதுநல வழக்கு
‘மனுதாரர் பொது நல வழக்காக தாக்கல் செய்துள்ளார். எனவே தான், இந்த மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்டது.
‘பொதுநல வழக்காக அல்லா மல் வேறு முறையில் தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். இதன்படி, இந்த மனுவை நாங்கள் நிராகரிக்கி றோம்’ எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.