சென்னை, ஜன.6- முரசொலி அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்று உயர்நீதிமன் றத்தில் அரசுத் தரப்பில் ஆவணங் களை தாக்கல் செய்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வருவாய் துறைக்கு உத்தரவு
சென்னை கோடம்பாக்கத்தில், பஞ்சமி நிலத்தில் முரசொலி நாளிதழ் அலுவலகம் உள்ளது என்று தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தில், பா.ஜனதா நிர் வாகி சீனிவாசன் கடந்த 2019ஆம் ஆண்டு புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விளக்கம் கேட்டு, முரசொலி அறக் கட்டளைக்கு ஆணையம் தாக்கீது அனுப்பியது.
இந்த தாக்கீதை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத் தில், முரசொலி – அறக்கட்டளை நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கு 3.1.2024 அன்று விசாரணைக்கு வந்த போது, முரசொலி அலுவலகம் உள்ள நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு வருவாய் துறைக்கு உத்தரவிட்டார்
இந்த வழக்கு 4.1.2024 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரமன்லால் ஆஜராகி, ‘இந்த நிலம் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துக்கு சொந்த மானது.
இந்த நிறுவனம் கலைக்கப்பட்ட பின்னர், அதை பார்வதி மாதவன் நாயர் என்பவருக்கு விற்கப்பட்டது. அவரிடம் இருந்து. அஞ்சுகம் பதிப் பகம் நிலத்தை வாங்கியுள்ளது. இது பஞ்சமி நிலம் இல்லை’ என்று கூறி அதுதொடர்பான ஆவணங் களை தாக்கல் செய்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன். ‘இந்த விவகாரத்தில் 2019ஆம் ஆண்டு முதல் தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் உத்தரவு எதுவும் பிறப்பிக்காமல் இழுத் தடித்து வருகிறது.
அரசியல் ஆதாயத்துக்காக இந்த புகாரை கிடப்பில் போட்டு வைத்துள்ளது. மக்கள் வரிப் பணத்தில் செயல்படும் ஆணை யத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர். தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் வித மாக செயல்பட்டுள்ளனர்.
மணிப்பூர் மக்கள் கொடூரமாக, கடுமையாக பாதிக்கப்பட்டபோது இந்த ஆணையம் என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பினார்.
அதிகாரம் உள்ளது
தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தின் சார்பில் ஆஜராக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘நிலத்தின் உரிமை யாருக்கு உள்ளது? என ஆணையம் முடிவு எடுக்காது. ஆனால், சம்பந்தப்பட்ட நிலம் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப் பட்டதா? என்பதை ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளது” என்றார்.
புகார்தாரர் சீனிவாசன் தரப் பில், ‘முரசொலி அறக் கட்டளை என்பது அந்த நிலத்தின் வாடகை தாரர் மட்டுமே என்பதால், அஞ்சுகம் பதிப்பகத்திடம் விளக்கம் கேளுங்கள் என ஆணையத்திடம் விளக்கம் அளிக்கலாமே தவிர, ஆணையம் அனுப்பிய தாக்கீதை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர முடியாது. இது பஞ்சமி நிலம் என்பதற்கு புகார்தாரரிடம் ஆதாரங்கள் உள்ளன. ஆணையம் கேட்கும்பட்சத்தில் தாக்கல் செய்ய தயாராக உள்ளார்’ என்று வாதிடப் பட்டது.
அனைத்து தரப்பு வாதங்க ளையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், விசார ணையை தள்ளி வைத்து உத்தர விட்டார்.