சென்னை, ஜன. 6- தமிழ் நாட்டில் இஎம்ஆர்அய் கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மொத்தம் 1,353 ஆம்பு லன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 6 ஆயிரம் ஊழியர் கள் பணியாற்றி வருகின் றனர். அவசர மருத்துவ உதவிக்காக, தினமும் கட்டுப்பாட்டு அறைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட அழைப்புகள் வருகின்றன.
இந்நிலையில், தமிழ் நாடு முழுவதும்கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடு கள் குறித்து அதன் மாநிலத் தலைவர் செல்வ குமார், மண்டலத் தலை வர் முகமது பிலால் ஆகியோர் கூறியதாவது:
108 ஆம்புலன்ஸ் சேவையைப் பொறுத்த வரை சென்னை உட்பட பல மாவட்டங்களில் அழைப்பு வந்த 7 நிமி டங்களில் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கும் வகையிலான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட் டுள்ளன.
அதற்காக விபத்து நேரிட வாய்ப்புள்ள பகு திகள், முக்கிய இடங்கள், சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படு கின்றன.
கடந்த ஆண்டில் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் 19,19,504 பேர் பயனடைந் துள்ளனர். அதில் பிரசவ சேவைகளுக்காக மட் டும் 5,07,071 சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவை தவிர, சாலை விபத்துகளில் சிக்கிய 3,34,527 பேர் மீட்கப் பட்டு மருத்துவமனைக ளில் சேர்க்கப்பட்டுள் ளனர். அதேபோல், 1.19 லட்சம் இதய நோயாளி களும், 33 ஆயிரம் குழந் தைகளும் பயனடைந்துள் ளனர்.
சென்னையில் மட்டும் 1.05 லட்சம்பேர் பயன் பெற்றுள்ளனர். அதில் பிரசவ சிகிச்சைகளுக்காக 6,044 கர்ப்பிணிகள் பயன டைந்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கிய 10,659 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட் டுள்ளது.
சென்னையை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 91,084 பேர் பயனடைந்துள்ளனர். அவர்களில் 19,829 கர்ப்பிணிகளும்,சாலை விபத்துக்குள்ளான 15,866 பேரும் பயன் பெற்றுள்ளனர். அவசர காலங்களில் தாமதமின்றி ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதை தொடர்ந்து உறுதி செய்து வருகிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் ஆம்புலன்ஸ் சேவை 2023 ஆம் ஆண்டில் 19 லட்சம் பேர் பலன்
Leave a Comment