தமிழ்நாடு அரசின் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருதாளரும், கோவை சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனருமான புலவர் செந்தலை கவுதமன் மற்றும் பாவேந்தர் பேரவை தேவராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்து “தாய் வீட்டில் கலைஞர்” மற்றும் இயக்க நூல்களை வாங்கி சிறப்பித்தனர்.
திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் பயன்படுத்திய பிரச்சார ஊர்தி (வேன்) முன்பு ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்தனர். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்(18-10-2023)