நாட்டுக்காக காங்கிரஸ் மக்களிடம் நன்கொடை காங்கிரஸ் தலைவர் கார்கே பிரச்சாரம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜன.5 வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக ‘கிரவுட் பண்டிங்’ மூலம் நிதி திரட்டும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் அறிவித்தது. தேசத்திற்காக நன்கொடை கொடுங்கள் (டொனேட் ஃபார் தேஷ்) என்ற பெயரிலான காங்கிர ஸின் பிரச்சாரத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த டிசம்பர் 18ஆ-ம் தேதி தொடங்கி வைத்தார்.
நாட்டின் விடுதலைப் போராட் டத்துக்காக கடந்த 1920-ஆம்ஆண்டு ‘திலக் ஸ்வராஜ் ஃபண்ட்’என்ற பெயரில் நிதி திரட்டும் திட்டத்தை காந்தியார் அறிவித்தார். இத்திட் டத் தில் இருந்து உத்வேகம் பெற்று தேசத்திற்கான நன்கொடை பிரச் சாரத்தை தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்தது. காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 138 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 138இ-ன் மடங்குகளில் (ரூ.138, ரூ.1380, ரூ.13,800…..) நன் கொடை வழங்குமாறு பொதுமக் களிடம் அக்கட்சி கேட்டுக் கொண் டது.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “தேசத்துக்காக மக் களிடம் காங்கிரஸ் நன்கொடை கேட்பது இதுவே முதல்முறை. பணக்காரர்களை மட்டுமே நம்பி செயல்பட்டால் அவர்களின் கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும். காந்தியாரும் சுதந்திரப் போராட்டத்தின் போது பொது மக்களிடம் நன்கொடை பெற்றார்” என்றார். இந்நிலையில் தேசத்திற் கான நன்கொடை பிரச்சாரத்தின் கீழ் காங்கிரஸ் கட்சி இதுவரை ரூ.10.15 கோடி நிதி வசூலித்துள்ளது. இதனை காங்கிரஸ் மூத்த தலைவர் அஜ்ய் மாக்கன் அறிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *