அய்தராபாத், ஜன.4- லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தால் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட் டுள்ள நிலையில், அய்தராபாத்தில் குதிரையில் சென்று உணவு விநி யோகம் செய்யும் காட்சிப் பதிவு வைர லாகியுள்ளது.
ஒன்றிய அரசு அமல்படுத்தவுள்ள புதிய தண்டனை சட்டத்தின்படி, (பாரதிய நியாய சன்ஹிதா) சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தெரிவிக் காமல் தப்பியோடும் கனரக வாகன ஓட்டுநருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ. 7 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்த கடுமையான சட்டப் பிரிவு களை திரும்பப் பெறக் கோரி ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், மகாராட்டிரம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங் களில் லாரி ஓட்டுநர்கள் 1.1.2024 அன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னால் அத்தியா வசியப் பொருள்கள் விநியோகம், பெட்ரோல், டீசல், எல்பிஜி எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அய்தராபாத்தில் உணவு விநியோகம் செய்யும் ஊழியர் ஒருவர், குதிரையில் சொமேட்டோ பையை மாட்டிக் கொண்டு உணவை விநியோகிக்கும் காட்சிப் பதிவு இணையத் தில் வைரலாகி வருகின்றது.
அந்த உணவு விநியோகிக்கும் ஊழியரின் அர்ப்பணிப்பையும், புதிய முயற்சியையும் இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.