பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் மாணிக் சாஹா. இவர் மோடியின் புகழ் பாடுவ தற்காக ராமாயணம், மகாபாரதத்தை இழிவுப்படுத்தி யுள்ளார். இது குறித்து மாணிக் சாஹா கூறுகையில், “1980இல் ஒவ்வொரு ஞாயிறன்றும் தூர்தர்ஷனில் “மகாபாரதம்” மற்றும் “ராமாயணம்” இதிகாசங்களின் அத்தியா யங்களைப் பார்க்க தாய்மார்களும் சகோ தரிகளும் தொலைக்காட்சியை நோக்கி விரை வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போதெல்லாம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளிலும், பிரதமர் மோடியின் “மனதின் குரல்” நிகழ்ச்சியைக் கேட்க நம் தாய்மார்களும் சகோதரிகளும் விரைந்து செல்வதைப் பார்க்கிறோம். இந்த திட்டம் 1980களின் தொடர்களைவிட மிகவும் பிரபலமானது” என்று அவர் கூறினார்.