சாமியார் ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், நதியின் ‘புனிதம்’ பாழாகி விட்டது என்று கூறி, சிறுமியை ஹிந்துத்துவா குண்டர்கள் சித்திரவதை செய்கின்றனர்.
இந்த செயலின் காட்சிப் பதிவு பரவலாகி வருகிறது.
பாழாய்ப் போன பா.ஜ.க. ஆட்சி வந் தாலும் வந்தது; மனிதாபிமானம் என்பதை மத வாத யானையின் காலில் போட்டு மிதித்து மகிழ்ச்சி நதியில் ஆடிப் பாடும், ஆகாயம் வரை தாவிக் குதிக்கும் இந்த அற்பத்தனத்துக்கு முடிவே இல்லையா?
மக்கள் நாயகமாவது மண்ணாங்கட்டி யாவது – அதெல்லாம் அற்பம்! அற்பம்!!
கேட்டால் சொல்லுவார்கள், ‘‘எங்கள் மகாபாரதத்தில் ஏகலைவன் கட்டை விரலை துரோணாச்சாரியார் காணிக்கையாகப் பெறவில்லையா? எங்கள் இராமாயணத்தில் சம்பூகன் தலையை எங்கள் இராமபகவான் வாளால் வெட்டிக் கொலை செய்ய வில்லையா?” என்பார்கள்.
மேலும் கேட்டால், ‘‘பார்ப்பான் கொலை செய்தால், சிகைச்சேதம் (தலைமயிரைக் கத்தரிப்பது), பார்ப்பனர் அல்லாதார் கொலைச் செய்தால் சிரச்சேதம் (தலையை வெட்டுதல்) என்று எங்கள் மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகிறதே!” என்பர்.
‘‘மதம் யானைக்கோ, நாய்க்கோ பிடித் தாலும் ஆபத்து!”
மனிதனுக்குப் பிடித்தால் வேறு எல்லா வற்றையும்விட கொடூரமான ஆபத்தோ, ஆபத்து!
குளித்தால் கொடூரமா?
Leave a Comment