சிறீவைகுண்டம் கோவிலில் ஆய்வு செய்த நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் கோவில் பராமரிப்பு குறித்துப் பேசும் போது ஒரு இளைஞர் நானும் கோவிலுக்கு நன்கொடையாக பணம் கொடுத்துள்ளேன் என்று கூறினார்.
அதற்குப் பதில் அளித்த நிர்மலா சீதாராமன், ‘‘நீ உண்டியலில் போட்டாய், அப்படிச்செய்யாதே! யாருக்குக் கொடுக்கவேண்டுமோ (அர்ச்சனைத் தட்டில்) அங்கே போடு” என்று கூறுகிறார்.
‘‘ஒன்றிய நிதி அமைச்சரே அரசாங்கத்திற்குச் சென்று கோவிலின் வளர்ச்சிக்காகப் பயன்படவேண்டிய உண்டியல் பணத்தை அங்கு போடாமல் தட்டில் போடு என்று கூறுகிறார் எனில், இதுதான் அவரின் இனப் பாசமா?” என்ற கேள்வியோடு அந்தக் காட்சிப் பதிவை பகிர்ந்து வருகின்றனர்.
‘‘தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்” என்பார்கள், அது இதுதானோ!
கடவுள் உண்டியலில் பணத்தைப் போடாதே! மாறாக அர்ச்சகப் பார்ப்பானின் அர்ச்சனைத் தட்டில் போடு என்று சட்டத்தைக் காப்பாற்றவேண்டிய ஒன்றியத்தின் நிதியமைச்சர் உரக்கக் கூறுகிறார் என்றால், இதன் பொருள் என்ன? இனப்பற்று என்பதல்லாமல் வேறு என்ன பற்று?
தில்லை நடராசன் கோவிலில் என்ன நடந்தது? தீட்சதர்கள் வசம் அந்தக் கோவில் இருந்தபோது, நீதிமன்றத்தில் தீட்சதர்கள் காட்டிய கணக்கென்ன?
ஆண்டொன்றுக்கு உண்டியல் வசூல் ரூ.37,199.
செலவு ரூ.37,000.
மீதி, மிச்சம் ரூ.199 (பேட்டா விலை நினைவிற்கு வருகிறதோ!)
அரசின் கையில் அந்தக் கோவில் வந்த நிலையில், 15 மாத உண்டியல் வருவாய் ரூ.25,12,485.
அப்படி என்றால், நிர்மலா சீதாராமன் சொன்னதுதானே நடந்திருக்கிறது.
அர்ச்சகப் பார்ப்பான் வயிற்றில்தானே அறுத்துக் கட்டப்பட்டு வருகிறது.
யார் ‘உண்டிக்கு’ப் பணம்?
– மயிலாடன்
யார் ‘உண்டி’க்கு?
Leave a Comment