ஈரோடு, ஜன. 1- ஈரோடு கழக மாவட்ட கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 31-12-.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரோடு பெரியார் மன்றத்தில் 43 மாணவர்களுடன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
ஈரோடு த.காமராஜ் அனை வரையும் வரவேற்று உரையாற் றினார். தலைமைக் கழக அமைப் பாளர் ஈரோடு த. சண்முகம் பயிற்சிப் பட்டறை தொடங்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா. நற்குணம் தலைமையேற்று உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் மா. மணிமாறன், மாவட்டத் துணைத் தலைவர் வீ.தேவராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் து. நல்லசிவம், பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருஷ் ணன், கு.சிற்றரசு மாநகரத் தலை வர் கோ.திருநாவுக்கரசு, மாநகர செயலாளர் தே.காமராஜ், காப் பாளர் சிவகிரி சண்முகம், சுயமரி யாதை திருமண நிலைய அமைப் பாளர் ப.சத்யமூர்த்தி, பெரியார் படிப்பக வாசகர் வட்ட செயலா ளர் பி.என்.எம். பெரியசாமி, பெரியார் படிப்ப வாசகர் வட்ட தலைவர் ராஜேந்திரபாபு, மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ச. சசிகரன். திமுக பொறுப் பாளர் கு. இளங்கவி, மாவட்டம் மாணவர் கழக பொறுப்பாளர் குருவை மணிமாறன், , ஆசிரியர் செல்வகுமார், திண்டல் டாக்டர் தமிழ்கொடி,ஈரோடு ந. சிவரா மன், ஒன்றிய கழக செயலாளர் குமார், ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்
பேராசிரியர் ப.காளிமுத்து தந்தை பெரியார் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் முதல் வகுப் பெடுத்தார். திராவிடர் கழக கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் க. அன்பழகன் பார்ப்பன பண் பாட்டு படையெடுப்புகள் என்ற தலைப்பிலும், வழக்குரைஞர் பூவை.புலிகேசி பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள் என்ற தலைப்பிலும், எழுத்தாளர் வி.சி.வில்வம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் என்ற தலைப்பிலும், பேயாடுதல் சாமி ஆடுதல் அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் மருத்துவர் குன்னூர் இரா.கவுத மனும், புரபசர் ஈட்டி கணேசன் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம் என்ற தலைப்பிலும் தொடர்ந்து வகுப்பு எடுத்தத்த னர். தந்தை பெரியாரைப் பற்றிய சில விளக்கங்களை எடுக்க கூறி தமிழக தலைவர் காணொளியில் உரையாற்றினார். மாணவர்க ளும் கழக பொறுப்பாளர்கள் உரையைக் கேட்டு மகிழ்ச்சிய வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.
பயிற்சிப் பட்டறையில் பங் கேற்ற மாணவர்கள் பயிற்சிப் பட்டறையில் தாங்கள் பெற்ற பயன்கள் குறித்து பேசினார்.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பா ளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார். பயிற்சியில் பங்கேற்ற மாணவர் களுக்கு சான்றிதழ் வழங்கியும் ஏற்பாடு செய்த மாவட்ட கழக பொறுப்பாளர்களை பாராட்டி உரையாற்றினார்.
சிறப்பாக குறிப்பு எடுத்த சட்டக்கல்லூரி மாணவர் நா. கண் ணம்மா, ஈரோடு ஜெ ஜனனி, ஈரோடு சி.அர்சியா, ஈரோடு மாலதி பெரியசாமி, ஈரோடு இளஞ்செழியன் ஆகியோருக்கு இயக்க புத்தகங்கள் வழங்கி சிறப் பிக்கப்பட்டது.
பயிற்சிப் பட்டறையில் பங் கேற்ற மாணவர்களில் ஆண்கள்- 33 பெண்கள் – 10 கல்லூரி மாண வர்கள் 25 பள்ளி மாணவர்கள் 17 பங்கேற்ற சிறப்பித்தனர்.
ரூ.4,510 க்கு இயக்க புத்தகங்கள் விற்பனையாகின.