இந்தியாவில் ஒரே நாளில் 841 பேருக்கு கரோனா

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜன.1 நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 841 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் நேற்று (31.12.2023) வெளியிட்ட புள்ளி விவரத் தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

நேற்று (31.12.2023) காலை 8மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் புதிதாக 841 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இது, கடந்த 227 நாட்களில் அதாவது 7 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாகும். இதற்கு முன்பு கடந்த மே 19-ஆம் தேதி 865 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளானதே அதிகபட்ச அளவாக இருந்தது. அதையடுத்து, டிசம்பர் 5 வரையில் பாதிப்பு படிப் படியாக குறைந்து இரட்டை இலக்கத் துக்குள் வந்தது. இந்த நிலையில், புதிய திரிபு கண்டறியப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை தற்போது படிப் படியாக அதிகரிக்கத் தொடங்கியுள் ளது. இதற்கு, குளிர் காலமும் முக்கிய காரணமாகியுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றுக்கு கிசிச்சை பெறுபவர்களின் எண் ணிக்கை 4,309-ஆக உயர்ந்துள்ளது. கேரளா, கருநாடகா, பீகார் மாநிலங் களில் தலா ஒருவர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இவ்வாறு புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் ஒரே நாளில் 599 பேரிடம் நடத்தப்பட்ட கரோனா பரிசோத னையில் 10 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மாநில சுகாதார துறை அமைச்சர் சவுரவ் பரத் வாஜ் தெரிவித்துள்ளார். ராமேசுவரம்: கரோனா பரிசோதனை எண்ணிக் கையை அதிகப்படுத்த மாநில அரசு களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக, ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் தெரிவித்தார்.

ராமேசுவரத்தில் நேற்று (31.12.2023 நடை பெற்ற ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு, அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு அரசின் சுகா தாரத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கரோனா, ஜேஎன்-1 திரிபு வைரஸ் பரவல் தொடர்பாக ஒன்றிய அரசு உன்னிப்பாக கவனித்து வரு கிறது. தற்போது வரை மிகவும் குறைவான தொற்று பரவல் மட்டுமே உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. ஒன்றிய அரசின் வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாநில அரசு பரிசோதனை எண்ணிக் கையை அதிகப்படுத்த உத்தரவிடப்பட் டுள்ளது. வழிமுறைகளைப் பின்பற்றி னால் நிச்சயம் தொற்று பரவலை முன்கூட்டியே தடுக்க முடியும் என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *