புதுடில்லி, ஜன.1 சமீப ஆண்டு களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உல கெங்கிலும் உயர்ந்து வரும் சூழ லில் எல் நினோ வானிலை, ஏற் றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள், கட்டுப்பாடுகள் உள் ளிட்ட காரணங்க ளின் பின்னணி யில் 2024 ஆம் ஆண்டு உலகெங் கிலும் உள்ள நுகர்வோர் விலை உயர்வு பிரச்சினைகளை எதிர் கொள்ள உள்ளனர் என கூறப் பட்டுள்ளது.
எல் நினோ & உணவு உற்பத்தி
ஆசியாவின் பெரும் பகுதி களுக்கு வறட்சி யை ஏற்படுத்திய எல் நினோ வானிலை நிகழ்வு, 2024 ஆம் ஆண்டின் முதல் பாதி யில் தொடரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் உலகின் முக்கிய விவசாயப் பொருட்களாக உள்ள அரிசி, கோதுமை, பாமா யில் மற்றும் பிற உணவுப் பொருட் களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இறக்குமதி விநியோகமும் குறை யும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வறண்ட வானிலை காரணமாக குறைந்து விட்ட பயிர் சாகுபடி மற்றும் அழிக்கப்பட்டு வரும் நீர்த்தேக்கங்களின் காரணமாக ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறை ஆகியவற்றால் விளைச்சல் குறை யும் என்பதால், 2024 முதல் பாதி யில் குறிப்பாக ஆசிய நாடு களில் அரிசி உற்பத்தி குறையும் என்று வர்த்தகத்துறை கணிப்புகள் தெரிவித்துள்ளன. எல் நினோ வானி லையால் ஏற்பட்ட அதீத மழை மற்றும் தீவிர வறட்சி காரணமாக இந்த ஆண்டு இந்தியா அமெரிக்க உட் பட பல நாடு களில் உற்பத்தி குறைந்தது. இந்தியாவும் ஏற்று மதியில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. மேலும் ஆசியா வின் சில ஏற்றுமதி மய்யங்க ளில் அரிசியின் விலை மட்டுமே 40 முதல் 45 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
கோதுமை உற்பத்தி குறைவு
வறட்சியும் அதிகரித்து போது மான ஈரப்ப தம் இல்லாததால் இந்தியாவின் முக்கிய கோது மைப் பயிர் உற்பத்தி பாதிக்க உள்ளது.
விவசா யிகளிடம் முறையாக கொள்முதல் செய்யாத தான் விளைவாக போதுமான கையி ருப்பும் இல்லாத சூழலில் அதிக கோதுமை உற்பத்தி செய்த இந்தியாவே ரஷ்யாவில் இருந்து இறக்கு மதி செய்ய தள்ளப்பட்டது. இதே வறட்சியின் காரணமாக உலகின் 2 ஆவது கோதுமை ஏற்று மதியாளராக உள்ள ஆஸ்தி ரேலியாவிலும் உற்பத்தி குறைந் துள்ளது.
இதேபோல் உலகளாவிய பாமாயில் உற்பத்தியும் அடுத்த ஆண்டு குறைய வாய்ப்புள் ளது என்றும், இதனால் சமையல் எண்ணெய் மற்றும் பயோ டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
குறைந்து வரும் விளைச்சல் காரணமாக 2023-_2024 ஆம் ஆண்டில் கோதுமை விநியோ கம் கடந்த பருவ ஆண்டுடன் ஒப்பிடும் போது மோசமடையக் கூடும் என காமர்ஸ் வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க விவசாயத் துறைக்கு கடன் வழங்கும் முன்னணி நிறுவ னமான கோ பேங்க் தெரிவிக் கையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வரும் ஆண் டில் அதிகரிக்கும் என்பதையே நாங்கள் காண்கிறோம் என தெரிவித்துள்ளது. விவசாயப் பொருட் களை அதிக உற்பத்தி செய்து வந்த நாடுகளே தற்போது வீழ்ச்சியை சந்தித்து வருவதாக தொடர் எச்ச ரிக்கை விடுக்கப்படுவது குறிப் பிடத்தக்கது.