காந்திநகர், ஜன. 1- ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்கீழ் வெளியான புள்ளி விவரங்களின்படி, கடந்த 5 ஆண்டுகளில், பா.ஜ.க. ஆளும் குஜ ராத்தில் மாநிலத்தில் போதைப் பொருள் பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2018 முதல் 2022 ஆண்டு வரை, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், குஜராத்தில் மட்டும் கஞ்சா, கோகைன் உள்பட மொத்தம் 93 ஆயிரத்து 691 கிலோ போதைப் பொருட்கள் கைப் பற்றப்பட்டுள்ளன. குறிப்பாக 2022 ஆம் ஆண்டு, நாடு முழுவதும் 71 கிலோ கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட் டது. அதில், 39 கிலோ குஜராத்தில் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேபோல், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாளர்கள் எண்ணிக்கையும் குஜராத்தில்தான் மிக அதிகமாக இருக்கும்
அதிர்ச் சித் தகவலும் வெளி யாகி உள்ளது. 19 லட்சத்து 20 ஆயிரம் குஜராத் மக்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர். அதில், 17 லட்சத்து 35 ஆயிரம் பேர் ஆண்கள் ஆவர். குஜராத்தில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் பெண்கள் போதைப் பொருளுக்கு அடி மையாகி இருப் பதும் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந் துள்ளது.
இதுதான் குஜராத் மாடல் குஜராத்தில் போதைப்பொருள் பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரிப்பு!

Leave a Comment