புதுக்கோட்டை,டிச.30- அரியலூர் மாவட்டத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சிமெண்ட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி புதுக்கோட்டை மாவட்டம் நந்தன சமுத் திரம் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது.
மேலும், அருகில் நின்றிருந்த கார் மற்றும் வேன் மீது பயங்கரமாக மோதி யது. கார் மற்றும் வேனில் அய்யப்ப பக்தர்கள் இருந்துள்ளனர். டீக்கடை யிலும் டீ குடித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. லாரி மோதியதில் டீக்கடை மற்றும் வாகனத் தில் இருந்த 5 பக்தர்கள் நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக உயிரழந்தனர்.
19 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த வர்கள் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு எதிரே காவல் நிலையம் இருந்ததால், உட னடியாக காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு காயம் அடைந்த வர்களை மருத் துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.
மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடவுள் சக்தி இதுதானா? அய்யப்ப பக்தர்கள் 5 பேர் விபத்தில் பலி
Leave a Comment