கடலூர் மாவட்ட கழக செயலாளர் எழிலேந்தி தாயார் சுகன்யா கணேசன் மறைவு – விழிகொடை – உடல் கொடை

viduthalai
1 Min Read

வன்னியர்பாளையம், டிச. 30- கடலூர் வன்னியர் பாளை யம் ஆசிரியர் கணேசன் துணைவியாரும் மற்றும் மாவட்டக் கழக செயலா ளர் எழிலேந்தி, புகழேந்தி, மகிழேந்தி (நீதி அரசர், ஓய்வு) ஆகியோரின் தாயாரும் ஆகிய சுகன்யா கடந்த 27.12.2023 அன்று மறைவெய்தியதை ஒட்டி அவரின் கண்கள் புதுவை அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு கொடையாக வழங்கப்பட்டது.
28.12.2023 அன்று அவரின் உடல் சென்னை லலிதாம்பிகை மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொடையாக வழங்கப்பட்டது.
முன்னதாக அவரின் உடலுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட கழகத் தலைவர் தண்டபாணி, மாவட்ட கழக அமைப்பாளர் மணி வேல், மாவட்ட இணைச் செயலாளர் பஞ்சமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வேலு, மகளிர் அணி மாவட்ட பொறுப்பா ளர்கள் முனியம்மாள், தமிழ் ஏந்தி, கடலூர் மாநகரத் தலைவர் தென் சிவக்குமார், செயலாளர் சின்னதுரை மற்றும் தோழர்கள் திமுக சார் பில் மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர் இள.புகழேந்தி, கடலூர் மாவட்ட தமிழ் சங்க தலைவர் பேராசிரியர் ராச.குழந்தைவேலன், ராச.சொக்கநாதன், ராச. வேலுமணி, வி.அழகர சன், அன்பன் சிவா மற் றும் அனைத்து கட்சி அலுவலர் சங்கத்தை சேர்ந்தவர்கள் என பல தரப்பினரும் உடலுக்கு மாலையிட்டு வீரவணக் கம் தெரிவித்தனர். இரங் கல் கூட்டமும் நடைபெற் றது. உடல் கொடை கொடுத்த பின் இறுதி ஊர்வலம் புறப்பட்டு வீரவணக்க முழக்கமிட்டு சென்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *