மக்களோடு நேரடித்தொடர்பு இல்லாத ஒன்றிய அரசு மக்களோடு நேரடியாகத் தொடர்பிலிருக்கும் மாநில அரசுகளுக்கு பேரிடர் காலங்களில் தரும் ஒத்துழைப்பு பாசிச பா.ஜ.க.வின் ஆட்சியில் தனது அல்லது கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒருமாதிரியாகவும், எதிர்க்கட்சிகள் ஆட்சியிலுள்ள மாநிலங்களில் வேறு மாதிரியாகவும் உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இது வெளிப்படையாகத் தெரிகிறது
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட சேதம் ஓய்வதற்குள் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை பெய்துள்ளது. இந்த இயற்கைக் சீற்றங்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ஒன்றிய அரசிடம் பேரிடர் நிவாரணத் தொகையாக தமிழ்நாடு அரசு கேட்ட ரூபாய் 20,000 கோடியைத் தருவது குறித்தான கேள்விக்குதிமிர்த்தனமாக பதிலளித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “எந்த மாநிலத்திலும் ஏற்பட்ட பேரழிவுகளை “தேசியப் பேரிடராக” ஒன்றிய அரசு அறிவித்தது இல்லை” என்று கூறியிருந்தார்.
004 சுனாமி பேரழிவைத் தொடர்ந்து 2005இல் பேரழிவுகள் மேலாண்மைச் சட்டம் மூலம் பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority) ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அது உருவாக்கப்பட்டபோதே எதுவெல்லாம் தேசியப் பேரிடர் என்பதை வரையறுக்காமல் அரைகுறையாக உருவாக்கி இன்றுவரையில் தொடர்கிறது. ஆனால் நிர்மலா குறிப்பிட்டது உண்மை. ஒரு பேரிடரை ‘தேசிய பேரிடர்’ என்று அறிவிக்க சட்டப்படி எந்தஏற்பாடும் இந்தியாவில் இல்லை.
ஆனால்,“‘தீவிர இயற்கைப் பேரிடர்’ (Calamity Of Severe Nature) என்று அறிவிக்கும் முறை உள்ளது. பொதுவாக, தேசிய பேரிடர் மேலாண்மைக் கொள்கையின்படி, மாநில அரசுகளே மாநிலப் பேரிடர் நிவாரண நிதி (SDRFs) வழியே பேரிடர் நிவாரணம் வழங்க வேண்டும். ‘தீவிரமான இயற்கைப் பேரிடர்’களுக்கு மட்டுமே தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் உதவி வழங்கப்படும் (NDRF). இந்த வகையில், ரூ.54,770 கோடியை 2021-2022 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்துக்கு நிதி ஆணையம் ஒதுக்கியிருக்கிறது.
இந்த வகையில், நிதியிலிருந்து கூடுதல் உதவி வழங்கப்படும் (NDRF). இந்த வகையில், ரூ.54,770 கோடியை 2021-2022 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்துக்கு நிதி ஆணையம் ஒதுக்கியிருக்கிறது.
தமிழ்நாடு அரசு இப்போது அதைத் தான் கேட்கிறது. ‘தேசியப் பேரிடராக இந்த வெள்ளப் பாதிப்பை அறிவிக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு அரசு கோரியதில் எந்தத் தவறும் இல்லை; ஏனென்றால், பலஅரசியலர்கள் எளிய மக்களுக்குப் புரிவதற்காக அப்படியான பிரயோகத்தையும் பயன்படுத்துகிறார்கள்.
ஒரு மாநிலத்தின் வெள்ளப் பாதிப்பை இந்த வரையறையின் கீழ் ஒன்றிய அரசு அறிவித்தால்தான் அதன் நிதியுதவியை மாநிலம் பெற முடியும். 2015 சென்னை வெள்ளத்தை அப்படி மோடி அரசு அறிவித்தது. 2018இல் கேரளம் இதேஅறிவிப்பின் கீழ் நிதியுதவி பெற்றது. இந்த நிதியுதவியெல்லாமும்கூட நேர்ந்த இழப்புக்கு முன் ஒரு பொருட்டாக இல்லை. இதையெல்லாம் நிர்மலா அறியாதவரா? மிக மோசமாக ‘டெக்னிகாலிடிக்ஸ்’ பேசினார். வார்த்தை விளையாட்டு விளையாடினார்”. தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ.20,000 கோடிகளைத் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கொடுக்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டிருக்கிறது.
ஆனால் இதுவரை இரண்டு தவணை களாக ரூ.900 கோடிகளை மட்டுமே ஒன்றிய அரசு அளித்துள்ளது. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தமிழ்நாடு வந்து பார்வையிட்டுசென்ற பின்னரும் தமிழ்நாடு கேட்ட கூடுதல் நிதியைத் தராமல் மறுத்துள்ளது ஒன்றிய அரசு. தொகையைத் தரமுடியாது என்று சொல்வதற்கு எந்தவித நேர்மையான விளக்கமும் கொடுக்காமல் சொந்தநாட்டு மக்களையே எதிரிகளைப்போல கருதி இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தி யுள்ளார் நிர்மலா சீதாராமன். ஆனால், இதேபோன்று குஜராத் 2021ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது உடனடியாக பார்வையிட்ட மோடி அடுத்த நாளே ரூ. 1000 கோடிகளை வெள்ள நிவாரணமாக அள்ளித் தந்தார்.
தமிழ்நாட்டிலுள்ள பா.ஜ.க. பாசிஸ் டுகள் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து ஒன்றிய அமைச்சரவையில் இருக்கும் பாசிஸ் டுகள் தங்களது ஊடக மாமாக்களின் மூலம் மக்களிடையே பொய்யான தகவல்களைப் பரப்பி மாநில அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி வருகிறார்கள். ஆளுநருடன் கூட்டு சேர்ந்துகொண்டு ஒன்றிய அரசிடமும் பொய்யான தகவல்களைத் தருகின்றனர். அதன் வெளிப்பாடுதான் நாங்கள் கொடுத்த ரூ.4000 கோடி எங்கே என்று முட்டாள்தனமாக கேட்கிறார் ஒன்றியத்தின் நிதியமைச்சர்.
பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய கடமையில் இருக்கும் மாநில அரசுகள், ஒன்றிய அரசின் இத்தகைய புறக்கணிப்பால் மேலும் கடும் நிதி நெருக்கடிக்குள் சிக்கும் நிலைமை உருவாகிறது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எள்ளளவும் கண்டுகொள்ளாத பாசிஸ்டுகள் நிவாரணம் வழங்குவதாகவும், மக்களை மீட்பதாகவும் போட்டோசூட் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஒன்றிய அரசிடம் பாதிப்புகளை எடுத்துச் சொல்லி உடனடியாக போதுமான நிதியை கேட்க வக்கில்லாத, விருப்பமில்லாத பா.ஜ.க. பாசிஸ்டுகள் மக்களின் மீது அக்கறையுள்ளவர்களாக நடிக்கின்றனர்.
தேசிய பேரிடர் நிவாரண நிதி குறித்தான நிர்மலா சீதாராமனின் இந்த திமிர்த்தனமான பதிலைத் தொடர்ந்து வெளிவரும் பல்வேறு புள்ளி விவரங்கள் பேரிடர் நிவாரண நிதிப்பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதைக் காட்டுகின்றன.
முதலாளித்துவத்தின் கோரத்தாண் டவத்தால் ஏற்படும் காலநிலை மாற்றங் களின் காரணத்தினால் ஏற்படும் பேரிடர்களை முதலாளித்துவத்தை ஒழிப்பதன் மூலமே முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பதையும், அப்பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களைக் காக்க வக்கில்லாத இந்தியாவின் தேசியப் பேரிடரான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலை நாட்டிலிருந்து விரட்டியடிப்பதும்தான் நிரந்தரத்தீர்வு என்பதையும் மக்களிடம் கொண்டு செல்வோம்.