காஞ்சிபுரத்தில் வள்ளலார் விழா

3 Min Read

அரசியல்

காஞ்சிபுரம், அக். 20- காஞ்சி புரம் – வையாவூர் சாலை, எச்.எஸ். அவென்யூ பூங் காவில் 15.10.2023 அன்று மாலை 6.00 மணி அள வில், காஞ்சி தமிழ் மன் றத்தின் ஏழாம் நிகழ்வாக, வள்ளலாரின் 201ஆவது பிறந்தநாள் விழா கொண் டாடப்பட்டது. 

எழுச்சிப் பாடகர் உலகஒளி வள்ளலார் கொள்கைகள் குறித்து  பாடலைப் பாடினார்.  ஆசிரியர் ர. உஷா அனை வரையும் வரவேற்று உரையாற்றினார். 

நிகழ்ச்சிக்கு, க. முரு கன்,  ஜி. ராமதாஸ்,  ஆ. மோகன், பெ. சின்னதம்பி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முதுகலை தமிழாசிரி யர்  தே. நாகராஜன் தலைமை வகித்து, வள்ள லாரின் பாடல்கள் குறித் தும், ஜாதிச் சழக்குகளால் மக்களுக்கு ஏற்படும் துய ரங்கள் குறித்தும் உரை யாற்றினார். 

காஞ்சி தமிழ் மன்றத் தின் அமைப்பாளர் முனைவர் பா. கதிரவன்,  வள்ளலாரின் ஜாதி, மத எதிர்ப்புக் கருத்துக்களை, 

‘சங்கடம் விளைவிக் கும் ஜாதியையும் மதத்தை யும் தவிர்த்தேன்’,  ‘நால் வருணம் ஆசிரமம் ஆசா ரம் முதலா 

நவின்ற கலைச்சரிதம் எல்லாம் பிள்ளை விளை யாட்டே, ‘கண்மூடி வழக் கமெல்லாம் மண்மூடிப் போக’

முதலிய பாடல்களை மேற்கோள் காட்டி,  வள்ளலார் உயிர்நேயம் வளர்த்ததையும், பெரியார் மனிதநேயம் வளர்த்ததையும் எடுத்து ரைத்தார். 

தந்தை பெரியார் தன் வாழ்நாளில் தலைவர் என்று கூறியது வள்ளலா ரைத்தான் என்றும் கூறி னார்.

பாவலர் நரேந்திரன் வள்ளலாரின் வாழ்க்கை,  தொண்டு குறித்து அனை வரையும் ஈர்க்கும் கவிதை பாடினார்.  பாவலர் தேவேந்திரன் கவிதை பாடினார். 

‘வள்ளலாரும் தமிழும்’ என்ற தலைப்பில் கவிஞர் ஆ. ஜெனாதட் சின்,  வள்ளலாரின் பாடல் கள் குறித்தும், அவரு டைய தமிழ் உணர்வு குறித்தும், அருட்பா நூலில் அவர் பாடி இருக் கின்ற பாக்கள் குறித்தும் சிறப்பாக உரையாற்றினார். 

‘வள்ளலாரின் வாழ்வி யல்’ என்ற தலைப்பில்  வழக்குரைஞர் ஜி. கோதண்டராமன்,  வள் ளலாரின் இரக்க குணம், அவருடைய எளிமைப் பண்பு,  பசிப்பிணிப் போக் கிய பாங்கு, உயிர்நேயம்  முதலியவை குறித்து விளக்கமாக உரையாற்றி னார். 

‘வள்ளலாரும் பெரியாரும்’ என்ற தலைப்பில் காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலை வர் அ. வெ. முரளி, பெரியா ரின் முன்னோடி வள்ள லார் என்றும், வள்ளலா ரின் ஜாதி மத ஒழிப்பு, சமத்துவம், பெண்ணு ரிமை என்றும் பெரியா ரின் மனிதநேயம் குறித் தும், இருவருக்குமான சிந் தனைகளை ஒப்பிட்டும் பார்ப்பனர்கள்  வள்ள லாரை  நெருப்பிலிட்டுப் பொசுக்கிய சிதம்பர ரகசி யம் குறித்தும் விளக்கமாக உரையாற்றினார். 

நிகழ்வில் பாவலர் அமுதகீதன்,  வள்ளலாருக் கும், பெரியாருக்குமான கொள்கைத் தொடர்பை விளக்கி உரையாற்றினார். 

நிகழ்ச்சியில், பேராசிரியர் அரிஸ்டாட் டில், வழக்குரைஞர் ஆ. க. ரமேஷ், மு. சேகர்,  க. மகேந்திரன் பா. செந்தில் குமார், பா. ஜெயந்தி,  ஏழு மலை,  கா. முருகன்,  கலை வளர்மணி செல்வம்,  சுசி, பாரதி,  நளினி, விசார் ஜெகநாதன், சத்யநாரா யணன்,  நாச்சிமுத்து,  ஆதிநாராயணன்,   சங்கர் ஆறுமுகம்,  மணி, பிர காஷ், கோதண்டன் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

பொறியாளர் உ.க.  அறிவரசி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார். 

பெருமாள் அவர்கள் அனைவருக்கும் இரவு உணவு வழங்கினார். 

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு வழக்குரைஞர் ஜி. கோதண்டராமன்,  புக ழேந்தி, நாகராஜன்,  சிறீ ராம் சப்ளையர்ஸ்  டில்லி,  பெருமாள்  உள்ளிட் டோர் ஊக்குவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *