ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முதன்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வு

viduthalai
2 Min Read

சென்னை, டிச.29 ஆவின், மின் சார வாரியம் உள்ளிட்ட தமிழ் நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் முதல்முறையாக டிஎன் பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்புதிய பணியிடங்கள் அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் சேர்க்கப் பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் வெவ்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு பதவியின் கல்வித்தகுதிக்கு ஏற்ப, குரூப்-1, குரூப்-2, குரூப்-2-ஏ,குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட் டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அடுத்த ஆண்டு என்னென்ன போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற விவரங்கள் அடங்கிய 2024 வருடாந்திர தேர்வு அட்ட வணையை டிஎன்பிஎஸ்சி கடந்த 20ஆ-ம் தேதி வெளியிட்டது. அதில் 18 வகையான பணிகளில் 3,772 காலியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், இந்த தேர்வு அட்ட வணையில் ஆவின், மின்சார வாரியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள் ளதாக டிஎன்பிஎஸ்சி நேற்று (28.1.2023) ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் அந்தந்த நிறுவனங்கள் வாயிலாக அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப் பட்டு வந்தன என்பது குறிப் பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதியஅறிவிப்பின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உதவியாளர் பதவி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் உதவியாளர் (கிரேடு-3) பதவி ஆகியவை குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ தேர்வின் கீழும், தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவ னத்தில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு வக்ப் வாரியத்தில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் இளநிலை உதவி யாளர், தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தில் இளநிலை உதவியாளர், ஆவின் நிறுவனத்தில் ஜுனியர் எக்சிகியூட்டிவ் (ஆபீஸ்), ஜுனியர் எக்சிகியூட்டிவ் (தட்டச்சு)உள் ளிட்ட பதவிகள் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வின் கீழும் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் (லேப்) உள்ளிட்ட பதவிகள் ஒருங் கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வின் கீழும், மாநில போக்குவரத்துக் கழகத்தில் உதவி மேலாளர் (சட்டம்), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் மேலாளர் (கிரேடு 3) – சட்டம் மற்றும் முதுநிலை அலுவலர் (சட்டம்)ஆகிய பணிகள் ஒருங் கிணைந்த சட்டப் பணிகள் தேர் வின் கீழும் கொண்டுவரப் பட்டுள்ளன.

ஒவ்வொரு பதவியிலும் எத் தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்ற விவரம் எதுவும் தெரிவிக் கப்படவில்லை. புதிய பணியிடங்கள் அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் சேர்க்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள் ளது. எனவே, இப்புதிய பணியிடங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு நிரப்பப்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *