சென்னை, டிச. 28- பேரிடர் நிவார ணத்தை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித் துள்ளன.
இது தொடர்பாக இந்திய கம்யூ னிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியதாவது:
பேரிடர் நிவாரண நிதியாக ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.21,652 கோடி நிதி கோரப்பட்டுள்ளது.
பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நேரடியாக கோரிக்கை மனுவும் அளித்துள்ளார்.
ஆனால் இதுவரை ஒரு ரூபாய்கூட ஒன்றிய அரசு நிவாரணமாக வழங்கவில்லை. எனவே மாநில அரசு கோரியி ருக்கும் நிவாரண நிதியை உடனடி யாக ஒன்றிய அரசு வழங்கவும், பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தியும் வரும் ஜன.8ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசின் அலுவல கங்களுக்கு முன்பாக கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என்றார்.