பூமியின் துணைக்கோளான நிலா இரவில் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்தாலும், அது தனக்குள் பல்வேறு வியப்புகளை உள்ளடக்கியது. இதுவரை எத்தனையோ நாடுகள் நிலாவில் ஆராய்ச்சி செய்தாலும், நிலவின் தென் துருவ பகுதியில் மட்டும் எந்தவொரு நாடும் (இந்தியா தவிர) இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை.
இதற்கு காரணம் – பல மில்லியன் ஆண்டுகளாக நிலவின் தென் துருவப் பகுதியில் சூரிய வெளிச்சமே பட்ட தில்லை. ஆனால், இயற்கையில் ஏற்பட்ட மாற்றம் நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரி மாற்றம் ஏற்பட வைத்தது. நிலவு லேசாக சாய்ந்து. இதனால், நிலவின் தென் துருவத்தில் சில இடங்களில் சூரிய வெளிச்சம் பட்டது. பல பில்லியன் ஆண் டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இந்த சிறிய மாற்றம்தான் நிலவின் தென் பகுதியில், அடியாழத்தில் இருந்த பனிக் கட்டிகள் சில உருகி அங்கு தண்ணீரை உருவாக்கியது.
இங்குள்ள பள்ளங்களில் உறைந்தநிலையில் 80 மில்லி யன் டன் அளவுக்கு தண்ணீர் இருப்பதுடன், நமது சூரியக் குடும்பம் உருவான போது ஏற்பட்ட மோதல் காரணமாக நிலவின் தென் துருவத்தில் நிறைய காந்தமும் உருவானது. ஆனால் இது வெளிப்படையாக வெளியே இல்லாமல் காந்தக் குவியல்களாக நிலவின் அடியில் தென் துருவத்தில் உள்ளது. நிலவின் வட துருவத்தில் இந்த காந்தம் காணப் படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாமல், அதிக அளவு ஹைட்ரஜன், மீத்தேன், அமோனியா உள்ளிட்ட மூலக் கூறுகள் மற்றும் நிலவு உருவான நேரத்தில் அதில் படிந்த பொருட் கள் எல்லாம் இந்த தென் துரு வத்தில் தான் இருக்கின்றன. இந்தப் பொருட்களை ஆராய்ந்தால் உல கம் தோன்றியது எப்படி, மனித இனம் தோன்றியது எப்படி? என்று பல கேள்விகளுக்குக் கூட பதில் கிடைக்கும் என் கிறார்கள். இப்போது பூமியில் தண்ணீருக்கு அடுத்தபடியாக எரிபொருள் தேவை தான் உலக நாடுகளுக்கு முக்கிய தேவையாக இருக்கிறது. எனவே, கதிர்வீச்சு அபாயமில்லாத அதிக ஆற்றல் கொண்ட ஹீலியம் மூலக்கூறுகளை பூமிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படு கின்றன.
இதன் காரணமாகவே, சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள் ளிட்ட வல்லரசு நாடுகள் நிலவின் தென் துருவத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சூழலில்தான் தென் துருவத்தில் சந்திராயன் – 3 விண்கலத்தை தரையிறக்கி பெரும் சாதனை படைத்துள்ளது இந்தியா. இந்த ஆராய்ச்சியின் மூலம் நிலவை பற்றிய பல அரிய வியப்புகள் வெளியுலகுக்கு தெரியவரும்.