இளம் பருவந்தொட்டு, பொதுவுடை மைச் சித்தாந்தத்தில் தோய்ந்து தம் வாழ்நாளை எல்லாம் அந்தத் தத்துவத் துக்கும், அதுசார்ந்த இந்தியக் கம்யூனிஸ் டுக் கட்சிக்கும் நூறு விழுக்காடு அளவில் அர்ப்பணித்த அரும்பெரும் தொண்டறச் செம்மல் தோழர் ஆர்.என்.கே. அவர்கள்.
பல்லாண்டுகள் சிறைவாசம் கண்டு சித்திரவதைக்கு ஆளானவர். கொள்கை யில் தீவிரம், அதே நேரத்தில் அடக்கம், எளிமை, பண்பாட்டுத் தளத்தில் உயர்ந்து நிற்கும் தகைசால் தமிழர் அய்யா நல்லகண்ணு அவர்கள்.
தொண்ணூறு வயது முதிர்ந்த, பெரியார் பெருந்தொண் டர்களுக்கும், கட்சிக்கு அப்பாலும் பொதுநலம் பேணிய பெருமக்களுக்கும் சென்னைப் பெரியார் திடலில் பாராட்டு விழாவினை திராவிடர் கழகம் நடத்தியதுண்டு, அந்நிகழ்ச்சியில் தோழர் நல்லகண்ணு அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தோம். நல்ல உடல் நலத்துடன் மேலும் நாட்டுக்கு நற்தொண்டு ஆற்றிட அவர் நீடு வாழ வாழ்த்துகிறோம்.
– கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை,
26.12.2023
குறிப்பு: தொலைப்பேசி மூலம் தோழர் ஆர்.என்.கே. அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தார்.