காங்கேயம், டிச. 26- 23.12.2023 சனிக்கிழமை திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் நடத்திய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை காங்கேயம் அய்யாவு திருமண அரங்கில் 150 மாணவர்களுடன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
காங்கேயம் நகர செயலாளர் பெ.மணிவேல் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் பழைய கோட்டை அர்ச்சுனன் படத்தினை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
தி.மு.க சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலை வர் முத்து.முருகேசன் தலைமையேற்று உரையாற்றினார்.
திருப்பூர் மாவட்டத்தலைவர் யாழ்.ஆறுச்சாமி தொடக்கவுரையாற்றினார்.
தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்ட செயலாளர் குமரவேல், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் நானிலம் நாகராஜ், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மு. கிருஷ்ணவேணி, பல்ல டம் இளங்கோவன், சூலூர் தேவராஜ், ஈரோடு மாவட்ட காப்பாளர் சிவகிரி சண்முகம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்ம நாதன், புரட்சிகர முன்னணி பொறுப்பாளர் கவி,புரட்சிகர பெரியார் பெண்கள் அமைப்பு பொறுப்பாளர் கனிமொழி, பேராசிரியர் சரண்யாதேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பேராசிரியர் ப.காளிமுத்து “தந்தை பெரியார் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார்.
“பேயாடுதல், சாமியாடுதல்” – அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் மருத்துவர் குன்னூர் இரா.கவுதமன் அவர்கள் வகுப்பெடுத்தார்.
திராவிடர் கழக கிராம பிரச்சார குழு மாநில அமைப் பாளர் முனைவர் க. அன்பழகன் “பார்ப்பன பண்பாட்டு படையெடுப்புகள்” என்ற தலைப்பிலும், திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் “பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள்” என்ற தலைப்பிலும், முனைவர் அதிரடி க.அன்பழகன் “தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் ” என்ற தலைப்பிலும், புரபசர் ஈட்டி கணேசன் “மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம்” என்ற தலைப்பிலும் தொடர்ந்து வகுப்பு எடுத்தனர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களையும், மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய கழக பொறுப்பாளர் களையும் பாராட்டி உரையாற்றினார்.
ஆயுள் காப்பீட்டு கழக வளர்ச்சி அதிகாரி (ஓய்வு), ஆர்.சின்னசாமி, தஞ்சை மாநகர கழக துணைத் தலைவர் ரோட்டரி சங்கத் தலைவர் செ.தமிழ்செல்வன் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ், வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.
மாவட்ட காப்பாளர் அவிநாசி ராமசாமி அவிநாசி முத்து.சரவணன் பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் தாராபுரம் சக்திவேல், தாராபுரம் மாவட்டத் துணைத் தலைவர் புள்ளியான், வெள்ளக்கோயில் நல்லசிவம், வெள்ளக்கோயில் பெரியார் ஜெகன், மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் கோபி குமாரராஜா உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
சிறப்பாக குறிப்பு எடுத்த படியூர் திவ்யா சிறீகாங்கேயம் விஜயதாசினி, காங்கேயம் ரோஷினி காங்கேயம் அபிநயா, காங்கேயம் சிறீநிதி ஆகிய 5 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று சிறப்பித்த மாண வர்கள் வகுப்புகளின் சிறப்பு குறித்து கருத்து கூறினர்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் கழகப் பொறுப் பாளர்களுடன் குழு நிழல் படம் எடுத்து மகிழ்ந்தனர்.
காங்கேயம் பயிற்சிப் பட்டறையில் ரூ.5,080க்கு புத்தகங்கள் விற்பனையாயின.
பயிற்சிப் பட்டறையில் 80க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி இருபால் மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.